கோவில்பட்டி: இ.எஸ்.ஐ மருந்தகம், வங்கி ஊழியர்கள் உள்பட 26 பேருக்கு கொரோனா!

கோவில்பட்டி: இ.எஸ்.ஐ மருந்தகம், வங்கி ஊழியர்கள் உள்பட 26 பேருக்கு கொரோனா!

கோவில்பட்டியில் மெடிக்கல் ஷாப், வங்கி ஊழியர்கள் உள்பட 26 பேருக்கு கொரோனா தொற்று ஏற்படுத்தியுள்ளது. பாண்டமங்கலம் பகுதியில் 15 நாட்கள் கடைகளை அடைக்க தாசில்தார் உத்தரவிட்டுள்ளார்.

கோவில்பட்டி: இ.எஸ்.ஐ மருந்தகம், வங்கி ஊழியர்கள் உள்பட 26 பேருக்கு கொரோனா!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கோவில்பட்டி எச்.டி.எஃப்.சி வங்கி, இ.எஸ்.ஐ மருந்தகத்தில் பணியாற்றி வந்த மூன்று பேர் உள்பட 26 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதைத் தொடர்ந்து எச்.டி.எஃப்.சி வங்கி, இ.எஸ்.ஐ மருந்தகம் மூடப்பட்டுள்ளது. அந்த பகுதிக்குள் செல்ல, வெளியே வரவும் தடுப்புகள் அமைத்து தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோவில்பட்டி நகராட்சி கமிஷனர் ராஜாராம் உத்தரவு படி அந்த பகுதியில் நகராட்சிப் பணியாளர்கள் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தனர்.

கோவில்பட்டி: இ.எஸ்.ஐ மருந்தகம், வங்கி ஊழியர்கள் உள்பட 26 பேருக்கு கொரோனா!
கொரோனாத் தொற்று காரணமாக கோவில்பட்டி பாண்டமங்கலம் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் 15 நாட்களுக்கு கடைகளை அடைக்க தாசில்தார் மணிகண்டன் உத்தரவிட்டுள்ளார். அந்த பகுதியின் முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதி என அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 189 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.