நீண்ட நாட்களாக குழந்தை இல்லாத ஏக்கம் : பிளான் போட்டு குழந்தையை கடத்திய தம்பதி கைது!

மருத்துவமனைக்கு இவர்களை விக்னேஷ் - பிரபாவதி தம்பதி அழைத்து வந்துள்ளனர்.

திருப்பூரை சேர்ந்தவர் செல்வம் -செல்வராணி தம்பதி. இவர்களுக்கு கோவை சி.எம்.சி மருத்துவமனையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து இந்த தம்பதி திருப்பூர் சென்றுள்ளனர். இவர்கள் கடந்த 10 ஆம் தேதி திருப்பூர் ரயில் நிலையம் அருகே வந்த போது இவர்களுக்கு விக்னேஷ் என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. விக்னேஷ் இவர்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி செல்போன் எண்ணை கொடுத்து விட்டு சென்றுள்ளார்.

மறுநாள் விக்னேஷ் தனது மனைவி பிரபாவதியுடன் செல்வம் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது இவர்கள் குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு வந்துள்ளனர். பின்னர் அன்றிரவு செல்வம் வீட்டிலேயே இந்த தம்பதி தங்கியுள்ளனர். அடுத்த நாள் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வாங்காமல் என கூறி கோவை மருத்துவமனைக்கு இவர்களை விக்னேஷ் – பிரபாவதி தம்பதி அழைத்து வந்துள்ளனர்.

அப்போது ஜெராக்ஸ் எடுக்க போவதாக செல்வத்தை விக்னேஷ் அழைத்து செல்ல, பிரபாவதி எடை போட்டு பார்த்து வருவதாக ஒரு குழந்தையை தூக்கி கொண்டு சென்றுள்ளார். அதே சமயம் போன் வருவதாக கூறி செல்வத்தை விட்டுவிட்டு விக்னேஷ் அங்கிருந்து சென்றுள்ளார். இதனால் சந்தேகமடைந்த செல்வம் குழந்தை காணாமல் போனதை தெரிந்து அதிர்ந்து போயுள்ளார்.

இதுகுறித்து அந்த தம்பதி மாலை 6.15 மணிக்கு சிடி பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குழந்தை காணாமல் போன 24 மணி நேரத்தில் மீட்டு அதன் பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

மேலும் விக்னேஷ் – பிரபாவதி தம்பதியை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்த முதற்கட்ட விசாரணையில், திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை இல்லாததால் குழந்தையை கடத்தியது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Most Popular

#BREAKING: “ரூ.42 ஆயிரத்தை எட்டியது தங்க விலை”.. சவரனுக்கு ரூ.792 உயர்ந்து புதிய உச்சம்!

இந்த ஆண்டு தொடக்கத்தில் தங்க விலை உச்சத்தை அடைந்ததைத் தொடர்ந்து மாறி மாறி ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்தது. அதன் பின்னர், கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதும் எல்லா நாடுகளும் பொருளாதார ரீதியாக...

இந்தியாவிலேயே முதன் முறையாக வீட்டில் இருந்தே சிகிச்சை பெற அம்மா கோவிட்19 வீட்டு பராமரிப்பு திட்டம்! – எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைக்கிறார்

கொரோனா நோயாளிகள் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற அம்மா கோவிட் வீட்டு பராமரிப்பு என்ற சிறப்புத் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைக்கிறார். தமிழக அரசின் கடும் நடவடிக்கை காரணமாகத் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு...

பொதுமுடக்க விதிமீறல்: இதுவரை 8.52 லட்சம் வழக்குகள் பதிவு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சமூக விலகல் மற்றும் மாஸ்க் அணிதல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கை மூலமாக தான் நம்மை காத்துக் கொள்ள முடியும் என்பதால், இந்த கொடிய...

மதுரையில் குறையும் கொரோனா பரவல் : அமைச்சர் உதயகுமார் தகவல்!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,063பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது. மதுரையில் மேலும் 95...