டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடுகிறது கொல்கத்தா!

 

டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடுகிறது கொல்கத்தா!

ஐபிஎல் போட்டியில் இன்று இரண்டு போட்டிகள். முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியோடு மோதுகிறது கிங்ஸ் லெவன் பஞ்சாப்.

ஐந்து போட்டிகளில் ஆடி, மூன்றில் வென்று பாயிண்ட் டேபிளில் 4 வது இடத்தில் உள்ளது கொல்கத்தா. ஆறு போட்டிகளில் ஆடி ஒன்றில் மட்டுமே வென்று கடைசி இடமான 8-ம் இடத்தில் உள்ளது பஞ்சாப்.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடுகிறது கொல்கத்தா!

இன்றைய போட்டியில் கொல்கத்தா வென்றால், 2 அல்லது மூன்றாம் இடத்துக்கு முன்னேறும்.

பஞ்சாப் வென்றால் நெட்ரன்ரேட் அடிப்படையில் ஒன்று அல்லது இரண்டு இடங்கள் முன்னேறவும் வாய்ப்பிருக்கிறது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடுகிறது கொல்கத்தா!

டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பேட்டிங் ஆட முடிவெடுத்திருக்கிறார்.

சென்ற போட்டியில் அதிரடி காட்டிய ராகுல் திரிபாதியும் கில்லும் ஓப்பனிங் இறங்குகிறார்கள். ஓப்பனிங் இறங்கி சொதப்பி வந்த சுனில் நரேன் பின் வரிசையில் இறங்குவார் எனத் தெரிகிறது.