Home விளையாட்டு கிரிக்கெட் பெங்களூருக்குப் பதிலடி கொடுக்குமா கொல்கத்தா? #IPL #RCBvsKKR

பெங்களூருக்குப் பதிலடி கொடுக்குமா கொல்கத்தா? #IPL #RCBvsKKR

ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பலம் வாய்ந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எளிதாக வென்றது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. பூரண் தனது அதிரடியான ஆட்டத்தை மீண்டும் ஒருமுறை நேற்று வெளிப்படுத்தினார்.

இன்றைய போட்டியில் மோதிக்கொள்ளப்போவது மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் vs விராட் கோலி தலைமையிலான ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர்.

9 போட்டிகளில் ஆடியுள்ள பெங்களூர் அணி, 6-ல் வென்று பாயிண்ட் டேபிளில் மூன்றாம் இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் கொல்கத்தாவை அதிக நெட்ரன்ரேட் கிடைக்கும் வகையில் வென்றால் முதல் இடத்திற்குச் செல்லக்கூட வாய்ப்பிருக்கிறது. ரன்ரேட் குறைவாக இருந்தாலும் இரண்டாம் இடத்துக்கு முன்னேறும்.

கொல்கத்தா அணி, 9 போட்டிகளில் ஆடி 5 போட்டிகளில் வென்று பாயிண்ட் டேபிளில் 4 ஆம் இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் பெங்களூரை அதிக நெட்ரன்ரேட் கிடைக்கும் வகையில் வென்றால் இரண்டு அல்லது மூன்றாம் இடங்களுக்கு முன்னேற வாய்ப்பு அமையலாம். மிக குறைவான ரன் ரேட் எனில் இப்போதைய நான்காம் இடத்திலேயே இருக்கும்.

இதற்கு முன் மோதிய இந்த அணிகளுக்கு இடையேயான போட்டியில் 82 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி வாகை சூடியது. முதலில் ஆடிய பெங்களூர் அணியில் டி வில்லியர்ஸின் வெறித்தனமான ஆட்டத்தால் (33 பந்துகளில் 73 ரன்கள்) அணியின் ஸ்கோர் 194 என்று உயர்ந்தது.

அடுத்து ஆடிய கொல்கத்தா அணியில் கில் மட்டுமே 30 ரன்களைக் கடந்திருந்தார். மற்றவர்கள் சொற்பமான ரன்களில் அவுட்டாக 20 ஓவர் முடிவில் 112 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்தத் தோல்விக்கு இன்று பதிலடி கொடுக்குமா கொல்கத்தா?

கொல்கத்தா அணி பேட்டிங்கில் கில், திரிப்பாதி, ரானா, இயன் மோர்கன், தினேஷ் கார்த்திக், கம்மின்ஸ் நன்றாக ஆடி வருகிறார்கள். ஆனால், அதிரடி பேட்ஸ்மேன் எதிரணிக்கு அச்சமூட்டும் ரன்களைக் குவிக்கும் ரஸல் இன்னும் முழு ஃபார்ம்க்குத் திரும்ப வில்லை. பவுலிங்கில் கம்மின்ஸ், சுனில் நரேன், ஷிவம் மாவி, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் குறிப்பிடத் தகுந்த விதத்தில் வீசி வருகின்றனர்.

பெங்களூர் அணி செம ஃபார்மில் இருந்து வருகிறது. படிக்கல், ஆரோன் பின்ச், விராட் கோலி, மோரிஸ் என பேட்டிங் நல்ல வலுகொண்டது. அதிலும் டி வில்லியர்ஸ் ஃபுல் ஃபார்மில் இருக்கிறார். ராஜஸ்தான் அணியோடு போட்டியில் 22 ரன்களில் 6 சிக்ஸர், ஒரு பவுண்ட்ரி விளாசி 55 ரன்களைக் குவித்தார். இவரை வீழ்த்துவதே கொல்கத்தாவின் கடுமையான வேலையாக இருக்கும்.

பெங்களூர் பவுலிங்கில் ரன்களைக் கட்டுப்படுத்தும் வாஷிங்க்டன் சுந்தர், விக்கெட்டுகளை வீழ்த்த சஹல், சைனி, மோரிஸ் என திட்டமிட்டு ஓவர்களை வீசி வருகின்றனர்.

இவ்வளவு பலம் வாய்ந்த பெங்களூரை வெல்வது கொல்கத்தாவுக்கு சிரமமே. ஆனால், புது கேப்டன் இயன் மோர்கன் தனது திறமையைக் காட்ட வேண்டிய கட்டாஅயத்தில் இருப்பதால் வெற்ரிக்கு கடுமையாகப் போராடுவார்கள்.

மாவட்ட செய்திகள்

Most Popular

வேளாண் சட்டங்களை கண்டித்து விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தஞ்சை ரயில் நிலையத்தை விவசாயிகள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

“பத்தாம் க்ளாஸ் படிச்சா போலீஸ் அதிகாரி ,அஞ்சாம் க்ளாஸ் படிச்சா அரசு அதிகாரி”-ஆப் மூலம் நடந்த மோசடி அம்பலம்

ஒரு "பேஸ் ஆப்" மூலம் அரசு தேர்வுக்கு ஆள் மாறாட்டம் செய்து ஆட்களை அனுப்பிய மோசடி கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.

‘ஆவின் பாலில் சர்க்கரை கலந்த தண்ணீர் கலப்படம்’ : பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கண்டனம்!

திருவண்ணாமலை அருகே ஆவின் கொள்முதல் நிலையங்களில், பாலில் சக்கரை தண்ணீர் கலப்பதாக புகார்கள் எழுந்திருக்கிறது. பாலை திருடிவிட்டு, அதனை ஈடுகட்ட தண்ணீர் கலப்பதாக கூறி செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது....

வீட்டை விட்டு ஓடிய காதலர்கள் : காதலன் வீட்டுக்கு தீ வைத்த பெண் வீட்டார்!

காதல் திருமணம் செய்ய காதலர்கள் வீட்டை விட்டு ஓடிய நிலையில் காதலன் வீடு சூறையாடப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி...
Do NOT follow this link or you will be banned from the site!