ஆட்சியாளர்கள் செய்யும் தவறுக்கு மாலை போட்டு மரியாதையா செய்ய முடியும்? – கே.என்.நேரு கேள்வி

 

ஆட்சியாளர்கள் செய்யும் தவறுக்கு மாலை போட்டு மரியாதையா செய்ய முடியும்? – கே.என்.நேரு கேள்வி

கொரோனாவை வைத்து தி.மு.க அரசியல் செய்கிறது என்று அ.தி.மு.க கூறி வரும் நிலையில், ஆளுங்கட்சி செய்யும் தவறுகளுக்கு மாலை போட்டு மரியாதையா செய்ய முடியும் என்று கே.என்.நேரு பதிலடி கொடுத்துள்ளார்.
தி.மு.க முதன்மை செயலாளர் கே.என்.நேரு இன்று நிருபர்களக்கு பேட்டி அளித்தார். அப்போது, “சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் கொரோனா பாதிப்பு பற்றி ஆரம்பத்தில் எச்சரித்த போது அதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி. இப்போது கொரோனா பரவல் அதிகமாக உள்ள நிலையில் ஆளுங்கட்சிக்கு மாலை போட வேண்டும் என்று முதல்வர் நினைக்கிறாரா?

ஆட்சியாளர்கள் செய்யும் தவறுக்கு மாலை போட்டு மரியாதையா செய்ய முடியும்? – கே.என்.நேரு கேள்வி
எதிர்க்கட்சி தலைவர் என்பவர் ஆட்சியாளர்களின் தவற்றைச் சுட்டிக்காட்டுபவர். மாறாக அவர்களின் செயலை ஆதரித்து மாலையிட்டு மரியாதையா செய்ய முடியும்? கொரானா தொடர்பாக உண்மை இல்லாத ஒன்றை, உண்மை போலவே பேசுவதில் சுகாதரத்துறை அமைச்சருக்கு நிகர் வேறு யாருமில்லை. கொரானா தமிழகத்திற்கு வராது என்றார் முதல்வர். இன்று அவரின் அலுவலகத்திற்குள்ளேயே வந்துவிட்டது. கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு முழுமையாக தோல்வியடைந்துவிட்டது. வளர்ந்த நாடுகளில் மிக அதிக அளவில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அதனால் அங்கு கொரோனா பாதிப்பு அதிகம் தெரிகிறது. தமிழ்நாட்டில் சோதனைகள் நடத்தாமல் கட்டுக்குள் வைத்துள்ளோம் என்கிறார்கள்.

ஆட்சியாளர்கள் செய்யும் தவறுக்கு மாலை போட்டு மரியாதையா செய்ய முடியும்? – கே.என்.நேரு கேள்வி
தற்போது பிரதமர் மோடி இந்தியா – சீனா விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். எடப்பாடி பழனிசாமி போல இது ராணுவ பிரச்னை என்று அவர் கூறவில்லை. ஆனால், கொரோனா விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட வேண்டும் என்ற போது அது மருத்துவ பிரச்னை, அதனால் அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவையில்லை என்றார்.
முதல்வர் சேலத்திற்கு மட்டும் செல்வது ஏன்? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பிய பின்னரே கோவை, திருச்சி என ஆய்வுக்கு வந்திருக்கிறார் முதல்வர். தி.மு.க கூட்டம் கூட்டினால் கொரோனா வரும் என்ற முதல்வர்தான் தற்போது பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று கூட்டம் கூட்டி வருகிறார்.

ஆட்சியாளர்கள் செய்யும் தவறுக்கு மாலை போட்டு மரியாதையா செய்ய முடியும்? – கே.என்.நேரு கேள்வி
திமுக ஆட்சியில் கடுகளவு தவறு நடந்தாலும் மலையளவு எழுதும் ஊடகங்கள், இந்த ஆட்சியில் மவுனமாக இருப்பது ஏன்?. மேட்டூரில் 43 அடி தண்ணீர் இருந்தபோதே கலைஞர் தண்ணீரை ஜூன்-12 ஆம் தேதி திறந்தார். இன்று இயற்கையின் உதவியால் 100 அடி இருக்கும்போது தண்ணீரைத் திறந்து அதை சாதனை என்கிறார் முதல்வர்” என்றார். நேருவிடம் சசிகலா விடுதலைப் பற்றி கேள்வி எழுப்பியபோது, “சசிகலா விடுதலைக்குப் பிறகு அ.தி.மு.க-வில் மாற்றம் இருக்கலாம்” என்றார்.