KKR Vs KXIP : மிரட்டப் போவது யார்? சொதப்பப் போவது யார் ?

 

KKR Vs KXIP : மிரட்டப் போவது யார்? சொதப்பப் போவது யார் ?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில்  கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சந்திக்க இருக்கிறது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில்  கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சந்திக்க இருக்கிறது.

ராஜஸ்தான் அணியுடனான முந்தைய ஆட்டத்தில் மன்கட் முறையில் பட்லரை அவுட் செய்து சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின். இந்த பரபரப்பான சூழலில், கொல்கத்தா அணியை பஞ்சாப் இன்று எதிர்கொள்ள இருக்கிறது. 

பஞ்சாப் அணி 

பஞ்சாப் அணியில் க்றிஸ் கெய்ல் மற்றும் சர்ப்ராஸ் கான் இருவரும் நல்ல ஃபார்மில் உள்ளனர். இவர்கள் இன்று அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. மேலும், கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், நிக்கோலஸ் பூரன், மன்தீப் சிங் ஆகியோரும் பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளனர். பந்து வீச்சில் முகமது சமி, முஜிபுர் ரஹ்மான், அங்கித் ராஜ்புத் ஆகியோர் மிளிரக்கூடும்.

ஐபிஎல்

கொல்கத்தா அணி 

கொல்கத்தா அணியும் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் விளையாட உள்ளது. கடந்த ஆட்டத்தில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ் லின், உத்தப்பா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் பேட்டிங்கில் அவ்வளவாக கவரவில்லை. மாறாக ராணா, ரசல், சுப்மான் கில் ஆகியோர் அதிரடியால் அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினர். அவர்களிடம் இருந்து இன்றும் ஒரு அருமையான இன்னிங்சை எதிர்பார்க்கலாம்.

ஐபிஎல்

உத்தேச ஆடும் லெவன் அணிகள் 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 

நிதிஷ் ராணா, கிறிஸ் லின், ராபின் உத்தப்பா, சுபமன் கில், ஜோ டெண்லி, தினேஷ் கார்த்திக் , ஆண்ட்ரே ரசல், பியூஷ் சாவ்லா, குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, லோகி பெர்குசன்.

கிங்ஸ் லெவென் பஞ்சாப் 

கிறிஸ் கெய்ல், லோகேஷ் ராகுல், மயான்க் அகர்வால், சர்பராஸ் கான், டேவிட் மில்லர், மன்தீப் சிங், சாம் கிர்ரன், ரவிச்சந்திரன் அஸ்வின், முஜிபுர் ரஹ்மான், முகமது ஷமி, அங்கித் ராஜ்புத்.

இதையும் படிங்க 

சேப்பாக்கத்தில் 1200, சௌகார்பேட்டையில் 6000 – ஐபிஎல் டிக்கெட் விற்பனையில் முறைகேடு

கிரிக்கெட் விளையாட்டில் நாகரீகம் வேண்டும் – அஸ்வினுக்கு பிசிசிஐ குட்டு