ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தில் கேகேஆர் ரூ. 5,500 கோடி முதலீடு!

 

ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தில் கேகேஆர் ரூ. 5,500 கோடி முதலீடு!

அமெரிக்க நிறுவனமான கேகேஆர் அண்ட் கோ, ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தில் 5,500 கோடி ருபாயை முதலீடு செய்துள்ளது.

ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தில் கேகேஆர் ரூ. 5,500 கோடி முதலீடு!

இந்த முதலீடு குறித்த தகவலை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி, ரிலையன்ஸ் ரீடெயல் நிறுவனத்தின் 1.28 சதவீத பங்குகளை வாங்குவதற்காக அமெரிக்க நிறுவனமான கேகேஆர், ரூ.5,500 கோடி முதலீடு செய்துள்ளது. இது இந்நிறுவனம் ரிலையன்சுக்கு சொந்தமான நிறுவனங்களில் முதலீடு செய்வது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே கடந்த ஆண்டில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் 11,367 கோடி ரூபாய் கேகேஆர் முதலீடு செய்திருந்தது.

ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தில் கேகேஆர் ரூ. 5,500 கோடி முதலீடு!

இது குறித்து கேகேஆர் நிறுவனத்தின் இந்திய பிரிவு முதன்மை செயல் அதிகாரி சஞ்சய் நாயர் கூறுகையில், சில்லரை வர்த்தகத்தில் சிறந்த அனுபவம் கொண்ட, சர்வதேச அளவில் கால்பதித்த நிறுவனங்களின் முதலீடை ரிலையன்ஸ் குழுமம் விரும்புவதாக தெரிவித்தார்.

முன்னதாக, சில்வர் லேக் என்ற மற்றொரு அமெரிக்க நிறுவனம், கடந்த இரு வாரங்களுக்கு முன்பு, ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தில் 1.75 சதவீத பங்குகளை வாங்க 7,500 கோடி ரூபாய் முதலீடு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தில் கேகேஆர் ரூ. 5,500 கோடி முதலீடு!
  • எஸ். முத்துக்குமார்