Home அரசியல் பா.ஜ.க-வுக்கு ஆட்டம் காட்ட நினைக்கும் கிஷோர்... தி.மு.க-வுக்கு தண்ணி காட்ட நினைக்கும் சுனில்... ஜெயிக்கப்போவது யாரு?

பா.ஜ.க-வுக்கு ஆட்டம் காட்ட நினைக்கும் கிஷோர்… தி.மு.க-வுக்கு தண்ணி காட்ட நினைக்கும் சுனில்… ஜெயிக்கப்போவது யாரு?

பாரதிய ஜனதா கட்சி தன்னை ஏமாற்றிய கோபத்தில் அதை பழிவாங்க நினைக்கும் பிரஷாந்த் கிஷோரும் தி.மு.க தன்னை கழற்றிவிட்டதால் அதை பழிவாங்க துடிக்கும் சுனிலும் மோதும் ஆட்டத்தின் முடிவு என்னவாக இருக்கும் என்று தி.மு.க, அ.தி.மு.க-வினர் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜ.க-வுக்கு ஆட்டம் காட்ட நினைக்கும் கிஷோர்... தி.மு.க-வுக்கு தண்ணி காட்ட நினைக்கும் சுனில்... ஜெயிக்கப்போவது யாரு?

பா.ஜ.க-வுக்கு ஆட்டம் காட்ட நினைக்கும் கிஷோர்... தி.மு.க-வுக்கு தண்ணி காட்ட நினைக்கும் சுனில்... ஜெயிக்கப்போவது யாரு?குஜராத் முதல்வராக இருந்தபோது மோடிக்கு அறிமுகமானவர் பிரஷாந்த் கிஷோர். தன்னுடைய தேர்தல் பணிக்கு அவரை சரியாக பயன்படுத்திக்கொண்டார் மோடி. மோடி பிரதமர் ஆனதும் எம்.பி பதவி தரப்படும் என்று பிரஷாந்த் கிஷோருக்கு ஆசை வார்த்தைகள் காட்டப்பட்டன. ஆனால், ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் தூக்கி எறியப்பட்டார் கிஷோர். இதனால் பா.ஜ.க மீது மிகுந்த கோபத்துடன் உள்ள அவர், பா.ஜ.க-வுக்கு எதிரான அணிகளுக்கு வலியச் சென்று பணியாற்றி வருகிறார். இதனால்தான், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு தொடர்புகொண்டபோது கூட மறுப்பு தெரிவித்துவிட்டார் என்று கூறப்படுகிறது.
பிரஷாந்த் கிஷோரின் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் சுனில். நாடாளுமன்றம், சட்டமன்ற தேர்தல்களில் பிரஷாந்த் கிஷோருடன் பணியாற்றிய சுனில் அதன்பிறகு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனியாக ஒரு நிறுவனத்தை தொடங்கி நடத்திவந்தார். அவரை தி.மு.க அணைத்துக்கொள்ளவே, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க-வுக்காக வேலை பார்த்தார் சுனில். இந்த நிலையில் தி.மு.க பக்கம் பிரஷாந்த் கிஷோர் சாய்ந்ததால் இதுவரை தேர்தல் பணிகளை கவனித்து வந்த சுனில் வெளியேற்றப்பட்டார்.

sunilகடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் மோடி எதிர்ப்பு அலைதான் முக்கியமாக இருக்கும். அதை வைத்து பிரசாரம் செய்யலாம் என்று வியூகம் அமைத்துக் கொடுத்ததே சுனில்தான் என்கின்றனர் அ.தி.மு.க-வினர். அவரது அந்த வியூகம்தான் தி.மு.க மிகப்பெரிய வெற்றி பெற காரணமாக இருந்தது. தீயாக வேலை செய்தவரையே கழற்றிவிட்டது தி.மு.க. அந்த கோபத்தில் சுனில் தற்போது அ.தி.மு.க பக்கம் சாய்ந்திருக்கிறார் என்று குதூகலிக்கின்றனர் அ.தி.மு.க-வினர். அதற்கு ஏற்றார்போல் தி.மு.க-வுக்கு தண்ணிகாட்டுவேன் என்று சபதம் எடுத்து செயல்பட்டு வருகிறாராம் சுனில்.

பா.ஜ.க-வுக்கு ஆட்டம் காட்ட நினைக்கும் கிஷோர்... தி.மு.க-வுக்கு தண்ணி காட்ட நினைக்கும் சுனில்... ஜெயிக்கப்போவது யாரு?கொரோனா காலத்தில் மக்களை கவர ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தை பிரஷாந்த் கிஷோர் தயார் செய்து கொடுக்க, தி.மு.க-வினர் கையில் உள்ள காசை எல்லாம் போட்டு மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். ஆனால், அம்மா உணவகம் மூலம் சில லட்சங்கள் மட்டுமே செலவு செய்து அ.தி.மு.க-வினர் ஈஸியாக ஸ்கோர் செய்ய காரணமாகிவிட்டாராம் சுனில்.
இதனால் பிரஷாந்த் கிஷோர் மீது தி.மு.க-வினர் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. தி.மு.க மாவட்டச் செயலாளர்களுக்கும் ஐபேக் ஊழியர்களுக்கும் இடையே மோதல் கிளம்பியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. நடந்து முடிந்த தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கூட இது பற்றி பலரும் புகார் வாசித்ததாகவும், தமிழகத்தைவிட மேற்கு வங்கம் மம்தா பானர்ஜிக்குத்தான் பிரஷாந்த் கிஷோர் முக்கியத்துவம் தருகிறார். எனவே, அவர் நமக்கு வேண்டாம் என்று தலைமையிடம் குறைபட்டுக்கொண்டதாகவும் செய்திகள் வெளியாகின.
அதே நேரத்தில் அ.தி.மு.க-வில் சுனிலுக்கு ராஜ மரியாதை வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சுனிலின் தேர்தல் வியூகம் அ.தி.மு.க-வுக்கு மீண்டும் ஆட்சி அதிகாரம் கிடைக்க வழி வகுக்கும் என்று அ.தி.மு.க-வினர் முழுமையாக நம்புகின்றனர். பிரஷாந்த் கிஷோர், சுனிலைத் தாண்டி தேர்தல் முடிவை தீர்மானிக்கப் போகிறவர்கள் மக்கள்தான். இது தெரியாமல் சுனிலா, கிஷோரா என்று சின்னப்பிள்ளை சண்டைபோட்டு வருகின்றன கழகங்கள் என்று மற்ற கட்சிகள் முகம்சுழிக்கின்றன. பா.ஜ.க-வை தமிழகத்திலும் பிரஷாந்த் கிஷோர் பழி தீர்ப்பாரா அல்லது தி.மு.க-வை பழிதீர்க்க வேண்டும் என்ற சுனிலின் எண்ணம் ஜெயிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

பா.ஜ.க-வுக்கு ஆட்டம் காட்ட நினைக்கும் கிஷோர்... தி.மு.க-வுக்கு தண்ணி காட்ட நினைக்கும் சுனில்... ஜெயிக்கப்போவது யாரு?
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

எஸ்.சி/எஸ்டி மாணவர்களிடம் விண்ணப்பக் கட்டணம் வசூலித்த குருநானக் கல்லூரி – எச்சரித்த தமிழ்நாடு அரசு!

சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பங்கள் வழங்கும்போது, விண்ணப்பக் கட்டணமாக, பட்டியலின பழங்குடியின மாணவர்களிடமும் இளநிலை படிப்புகளுக்கு 300 ரூபாயும், முதுநிலை படிப்புகளுக்கு 500 ரூபாயும் வசூலிக்கப்படுவதை...

“மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள்” தமிழக அரசு

மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் மாவட்ட அளவில் நடத்தப்படுகின்றன என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

“டைம் கொடுத்தேன்… ட்விட்டர் கேக்கல… பழிவாங்கிட்டேன்” – வெளிப்படையாக போட்டுடைத்த மத்திய அமைச்சர்!

டெல்லி விவசாயிகள் போராட்டத்திலிருந்தே ட்விட்டருக்கும் மத்திய அரசுக்கும் உரசல்கள் ஏற்பட்டு வருகின்றன. அரசுக்கு எதிராக கருத்து சொல்பவர்களின் ட்விட்டர் கணக்குகளை முடக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால்...

கோவையில் கொரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி… நேரில் பார்வையிட்ட ஆட்சியர்!

கோவை சர்வதேச யோகா தினத்தையொட்டி, கோவை கொடிசியா வளாகத்தில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்பட்ட யோகா பயிற்சியை, ஆட்சியர் சமீரன் நேரில் பார்வையிட்டார்.
- Advertisment -
TopTamilNews