போலி விவசாயிகள் 15நாட்களில் பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும்: ஆட்சியர் அதிரடி உத்தரவு!

போலி விவசாயிகள் 15நாட்களில் பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும்: ஆட்சியர் அதிரடி உத்தரவு!

திருவாரூர் மாவட்டத்தில் கிசான் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் பணத்தை 15 நாட்களில் கொடுக்க வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கிசான் திட்டத்தில் மோசடி நடந்திருப்பது அண்மையில் வெளிச்சத்துக்கு வந்தது. கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் உயரதிகாரிகளின் உதவியுடன் விவசாயிகள் அல்லாதோருக்கு நிதியுதவி வழங்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து பேசிய வேளாண்துறை செயலாளர் ககன் தீப் சிங், ரூ.110 கோடி பணம் கிசான் திட்டத்தில் மோசடி நடந்திருப்பதாகவும் இதில் சம்பந்தப்பட்ட 80 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

போலி விவசாயிகள் 15நாட்களில் பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும்: ஆட்சியர் அதிரடி உத்தரவு!

கிசான் திட்டத்தில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியது. இதில் மத்திய அரசு அதிகாரிகளுக்கும் சம்பந்தம் இருக்குமோ என்ற கேள்வி எழுந்திருப்பதால், இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. மேலும், முறைகேட்டில் ஈடுபட்டவர்களிடம் இருந்து பணம் திரும்பப்பெறப்பட்டு வருகிறது.

போலி விவசாயிகள் 15நாட்களில் பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும்: ஆட்சியர் அதிரடி உத்தரவு!

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கிசான் திட்டத்தில் முறைகேடு செய்த போலி விவசாயிகள் 15 நாட்களுக்குள் பணத்தை திரும்ப செலுத்த வேண்டும் என அம்மாவட்ட ஆட்சியர் ஆனந்த் உத்தரவிட்டுள்ளார். பணத்தை திருப்பி செலுத்தவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.