கிசான் திட்ட மோசடி – மாவட்ட நிர்வாகம் காலக்கெடு

கிசான் திட்ட மோசடி – மாவட்ட நிர்வாகம் காலக்கெடு

கடலூர் மாவட்டத்தில், கிசான் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் நாளை மாலைக்குள் பணத்தை திருப்பி செல்லுத்தா விட்டால், அரசு சலுகைகள் ரத்து செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கிசான் திட்ட மோசடி – மாவட்ட நிர்வாகம் காலக்கெடு

கிசான் திட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் 14 கோடியே 26 லட்சம் ரூபாய் மோசடி நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டு, மோசடியில் ஈடுபட்டவர்களை சிபிசிஐடி போலீசார் கைதுசெய்தனர். இதன் ஒரு பகுதியாக மாவட்டம் முழுவதும் 120 குழுக்களாக, பல்வேறு கிராமங்களுக்கு பிரித்து அனுப்பி வருவாய்த்துறை மற்றும் வேளாண்மை துறையினர் வசூல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

கிசான் திட்ட மோசடி – மாவட்ட நிர்வாகம் காலக்கெடு

இதில், இதுவரை சுமார் 12 கோடி வசூலாகியுள்ளது. எஞ்சி உள்ள பணத்தை நாளை மாலைக்குள் மோசடி செய்தவர்கள் திருப்பி செலுத்த வேண்டுமென்று, பல்வேறு கிராமங்களில் ஆட்டோ மற்றும் ஒலிபெருக்கிகள் மூலம் விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றது. மேலும், மோசடியில் ஈடுபட்டவர்கள் இதுவரை 13 பேர் கைதுசெய்யப்பட்டு உள்ளதாகவும், இந்த நடவடிக்கையின் மூலம் 95% பணம் வசூலாகி விடும் என்றும் வேளாண் துறையினர் தெரிவிக்கின்றனர்.

கிசான் திட்ட மோசடி – மாவட்ட நிர்வாகம் காலக்கெடு