“பொங்கல் பரிசில் ரூ.1000 பிடித்தம்” : தலைதெறிக்க ஓடிய மக்கள்!

 

“பொங்கல் பரிசில் ரூ.1000 பிடித்தம்” : தலைதெறிக்க ஓடிய மக்கள்!

விழுப்புரம் மாவட்டம் முகையூர் அடுத்த கொல்லூர் கிராமத்தில் நேற்று தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வந்தது. இங்குள்ள 856 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு வழங்க இருந்த நிலையில் நேற்றுக்காலை நியாயவிலைக் கடைகளின் முன்பு பொதுமக்கள் வரிசையில் காத்து கிடந்தனர்.

“பொங்கல் பரிசில் ரூ.1000 பிடித்தம்” : தலைதெறிக்க ஓடிய மக்கள்!

அப்போது அங்கு வந்த வேளாண் விரிவாக்க மைய அதிகாரிகள் பொதுமக்களிடமிருந்து ரேஷன் அட்டைகளை வாங்கி வைத்து கொண்டனர். அப்போது ரூ.2500 பொங்கல் பரிசில் பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் மோசடி செய்து கடன் பெற்றவர்களுக்கு ரூ.1000 பிடித்தம் செய்துகொண்டு மீதம் ஆயிரத்து 500 ரூபாய் தருவதாக கூறினர். இதனால் சிலர் அங்கிருந்து தலைதெறிக்க ஓடியுள்ளனர். சிலர் ஒப்புக்கொண்டு வாங்கி சென்றாலும், சிலரோ அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் அரசியல்வாதிகளை அழைத்துக் கொண்டு வந்து தகராறு செய்துள்ளனர். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது.

“பொங்கல் பரிசில் ரூ.1000 பிடித்தம்” : தலைதெறிக்க ஓடிய மக்கள்!

இதைத்தொடர்ந்து ரேஷன் அட்டைகளை உரியவர்களிடம் ஒப்படைத்த வேளாண் விரிவாக்க மைய அதிகாரிகள் மோசடியாக நீங்கள் பெற்று பணத்தை திரும்ப வசூலிக்காமல் விடமாட்டோம் என்று எச்சரித்து விட்டு சென்றதாக தெரிகிறது. இதனால் அங்கு சில மணிநேரம் சலசலப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.