Home தொழில்நுட்பம் செல்டோஸ், சொனெட் கார்களில் புதிய லோகோ - அமர்க்களப்படுத்தும் கியா நிறுவனம்!

செல்டோஸ், சொனெட் கார்களில் புதிய லோகோ – அமர்க்களப்படுத்தும் கியா நிறுவனம்!

பிரபல தென் கொரிய கார் தயாரிப்பு நிறுவனமான கியா, அதன் பிராண்ட் லோகோவை மாற்றியுள்ளது. புதிய லோகோவை கியா நிறுவனம் உலகம் முழுவதும் அறிமுகம் செய்து வைத்திருக்கிறது. அதன்படி இந்தியாவில் இன்று காணொலி வாயிலாக கியா அதிகாரிகள் புதிய லோகோவை அறிமுகம் செய்தனர். அதேபோல இந்தியாவில் அந்நிறுவனத்தின் பெயர் “கியா மோட்டார்ஸ் இந்தியா” என்று இருந்தது. தற்போது அதையும் மாற்றி கியா இந்தியா என்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

செல்டோஸ், சொனெட் கார்களில் புதிய லோகோ - அமர்க்களப்படுத்தும் கியா நிறுவனம்!
New Kia Logo Coming Early 2021 With Full Brand Relaunch

வருங்காலங்களில் கியா நிறுவன தயார்ப்புகள் அனைத்திலும் இந்தப் புதிய லோகோவே பொறிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. கியா நிறுவனம் தற்போது இந்தியாவில் செல்டோஸ், சொனெட், கார்னிவல் ஆகிய மூன்று விதமான மாடல்களை விற்பனை செய்கிறது. இதில் முதற்கட்டமாக செல்டோஸ், சொனெட் ஆகிய இரு மாடல்களில் மட்டுமே புதிய லோகோ பொறிக்கப்படவுள்ளது. மே மாதம் முதல் வாரம் ஷோரூம்களில் இந்தக் கார்கள் காட்சிப்படுத்தப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

செல்டோஸ், சொனெட் கார்களில் புதிய லோகோ - அமர்க்களப்படுத்தும் கியா நிறுவனம்!
பழைய லோகோ

புதிய லோகோ, புதிய பெயர் வரிசையில் ‘Movement that Inspires’ என்ற வாசகத்தையும் புதிதாக கியா அறிமுகப்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் இந்தியாவில் கார் உற்பத்தியில் புரட்சி செய்யும் திட்டத்தின் முதற்படியாக இந்த வாசகத்தை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதேபோல வாடிக்கையாளர்களுடன் நிறுவனத்துடன் எளிதில் பிணைப்பை உருவாக்கும் பொருட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் கியா கூறுகிறது.

செல்டோஸ், சொனெட் கார்களில் புதிய லோகோ - அமர்க்களப்படுத்தும் கியா நிறுவனம்!

கியா நிறுவனம் 2017ஆம் ஆண்டு தான் இந்தியாவில் காலடி எடுத்து வைத்தது. ஆந்திர அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு உற்பத்தி அலகை அங்கு துவக்கியது. 2019ஆம் ஆண்டு தான் கியா கார்கள் விற்பனைக்கு வந்தன. ஒரு ஆண்டில் சுமார் 3 லட்சம் கார்களை கியா நிறுவனம் உற்பத்தி செய்திருக்கிறது.

கியாவின் புதிய லோகோ அறிமுகம்... புதுப்பிக்கப்பட்ட செல்டோஸ், சொனெட் கார்களின் அறிமுகம் எப்போது?

அதேபோல விற்பனைக்கு வந்த உடனே இந்தியர்களிடையே கியா பிரபலமடைந்தது. ஒன்றரை ஆண்டுகளில் 2.5 லட்சம் கார்கள் விற்பனைக்காகப் பதிவுசெய்யப்பட்டு அந்நிறுவனம் சாதனை படைத்தது. தற்போது 1.5 லட்சம் கியா கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. தயாரிப்பு, சேவை, தரம், நம்பகத்தன்மை ஆகியவற்றைக் கொண்ட இந்தியாவின் நான்காவது பெரிய வாகன உற்பத்தியாளராக கியா நிறுவனம் திகழ்கிறது.

செல்டோஸ், சொனெட் கார்களில் புதிய லோகோ - அமர்க்களப்படுத்தும் கியா நிறுவனம்!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

“மாணவர்களை அலைக்கழைக்காதீர்கள்… தாமதமின்றி வழங்குங்கள்” – அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு!

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களிடமிருந்து வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் கோரி பெறப்படும் மனுக்கள் மீது எவ்விதக் கால தாமதமுமின்றி உடனடியாகப் பரிசீலித்து,...

இந்தியாவுல ஃபர்ஸ்ட்.. வேர்ல்டுல 11ஆவது – உலகளவில் டிரெண்டாகி மாஸ் காட்டும் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி அனைத்துவிதமான ஊடக வழியாகவும் நாட்டு மக்களிடம் தொடர்பில் இருந்துகொண்டே இருப்பார். சொல்லப்போனால் அதுதான் அவரின் பலமும் கூட. மன்கி பாத் மூலம் வானொலியில் உரையாடுவார். அந்த நிகழ்ச்சி...

வயிற்று வலியால் துடித்த மாணவி.. டாக்டர் சொன்னதை கேட்டு துடித்த பெற்றோர்

பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிவிட்டு தலைமறைவான பக்கத்துவீட்டு இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.சென்னை அடுத்த திருமுல்லைவாயலில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

‘ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய’… அதிமுக முன்னாள் எம்.பி திமுகவில் இணைகிறார்!

அதிமுக முன்னாள் எம்.பி பரசுராமன் திமுகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. திமுக ஆட்சி அமைத்ததில் இருந்து முதல்வரின் நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டு, பிற கட்சியை சேர்ந்தவர்கள் திமுகவில்...
- Advertisment -
TopTamilNews