பாஜகவில் இணைந்த குஷ்பு! – லாபம் குஷ்புவுக்கா… பாஜகவுக்கா?

 

பாஜகவில் இணைந்த குஷ்பு! – லாபம் குஷ்புவுக்கா… பாஜகவுக்கா?

”உங்களில் ஒருத்தியாகவும் உங்கள் வீட்டு மருமகளாக, மகளாக உங்களைத் தேடி வந்துள்ளேன்” இப்படிப் பேசியது குஷ்பு. 2014 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க வந்தபோது, ஆயிரக்கணக்கில் கூடியிருந்த மக்களின் முன்பு உரத்த குரலில் பேசினார்.

திமுகவில் குஷ்பு

தமிழ் திரையுலகில் தனித்த இடம் பிடித்தவர் குஷ்பு. ரசிகர்கள் அவருக்குக் கோவில் கட்டுமளவுக்குச் சென்றார்கள். ஒரு கட்டத்தில் அரசியலை நோக்கி நகர்ந்தார் குஷ்பு. திமுகவில் சேர்ந்து தேர்தலின்போது பிரசாரத்துக்கு அனுப்பப்பட்டார்.

பாஜகவில் இணைந்த குஷ்பு! – லாபம் குஷ்புவுக்கா… பாஜகவுக்கா?

தேசிய அரசியலில் குஷ்பு

வழக்கமாக தேர்தலில்போது பயன்படுத்தப்படும் சினிமா நட்சத்திரங்களைப் போல அல்லாமல், திமுகவின் முக்கியப் பொறுப்பில் உள்ளவராகவே நடத்தப்பட்டார். திமுகவின் அடுத்த தலைவர் பற்றிய அவரின் கருத்து கட்சிக்குள் சிக்கலை ஏற்படுத்த, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

மாநில அரசியலில் இருந்து விடுபட்டு, தேசிய அரசியலில் ஈடுபட விரும்புகிறார் என்பதாக அது புரிந்துகொள்ளப்பட்டது. தேர்தல்களின்போது குஷ்புவின் பிரசாரத்திற்கு மக்கள் திரண்டனர். ஆனால், 2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அவர் போட்டியிட சீட் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. காங்கிரஸ் கட்சிக்கும் 10 இடங்களை திமுக அளித்த போதிலும் குஷ்புக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட வில்லை. அதிலிருந்தே அதிருப்தியில் இருந்த குஷ்புவை பாஜகவில் சேர உந்தித் தள்ளியிருக்கிறது. பல மாதங்களாக யூகச் செய்தியாக இருந்தது மாறி, இன்று அதிகாரபூர்வமாக பாஜகவில் இணைந்தே விட்டார்.

பாஜகவில் இணைந்த குஷ்பு! – லாபம் குஷ்புவுக்கா… பாஜகவுக்கா?

தாமரை சூடிய குஷ்பு

குஷ்புவின் பல நிலைப்பாடுகள் பாஜகவுக்கு எதிரானது. ராமர் கோவில் இடிப்பு பற்றிய அவரின் கருத்து, கற்பு பற்றிய அவர் கூறியது என பல்வேறு உதாரணங்களைச் சொல்லலாம். மேலும், கடவுள் படங்கள் பின்னணியில் இருக்க செருப்பு அணிந்துகொண்டு குஷ்பு உட்கார்ந்திருந்த போட்டோ ஒன்றிற்காக தமிழகத்தின் பல இடங்களில் வழக்குகளைப் பதிவு செய்தனர் பாஜக ஆதரவு அமைப்பினர். ஆனால், பாஜகவுக்குள் குஷ்புவைக் கொண்டுவர அக்கட்சியின் சிலர் தீவிரமாக வேலை பார்த்தாகவும், அதன் பலனாகவே இன்று கட்சியில் சேர்ந்ததாகவும் சொல்லப்படுகிறது.

தம் கட்சியின் நிலைப்பாடுகளுக்கு முரண்பாடு உள்ள ஒருவரை கட்சிக்கு அழைப்பதன் மூலம் அக்கட்சிக்கு என்ன லாபம்… அதிகளவில் உடன்பாடு இல்லாத கொள்கைகள் உள்ள ஒரு கட்சியில் குஷ்புக்கு என்ன லாபம்?

பாஜகவில் இணைந்த குஷ்பு! – லாபம் குஷ்புவுக்கா… பாஜகவுக்கா?

குஷ்புவால் பாஜகவுக்கு லாபமா?

முதலில் பாரதிய ஜனதா கட்சியைப் பற்றிப் பார்ப்போம். 2019 ஆம் ஆண்டு தேர்தலில் இந்தியா முழுமைக்கும் மோடி அலை வீசியது. தென்னிந்தியாவில் சற்று குறைவு என்றாலும் தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணிக்கு ஒரே ஒரு சீட் மட்டுமே கிடைத்தது. அதனால், பாஜக எப்படியேனும் தமிழகத்தில் வலுபெற வேண்டும் எனப் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது.

திமுகவிலிருந்து வி.பி.துரைச்சாமி, செல்வம், ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை என வெவ்வேறு இடங்களிலிருந்து ஆட்களைச் சேர்த்துவருகிறார்கள். அதன் முக்கிய நகர்வே குஷ்புவின் இணைப்பு.

பாஜகவில் இணைந்த குஷ்பு! – லாபம் குஷ்புவுக்கா… பாஜகவுக்கா?

குஷ்புவின் வரவால் தமிழகத்தில் பாஜகவுக்கு பிரசாரம் செய்ய வெகுஜன முகம் கிடைத்துவிட்டது. குஷ்புவைப் போல பிரபலமான ஒருவர் வரும் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் நிச்சயம் எடுபடும் என நம்பலாம் பாஜக. அதன்மூலம், சில எம் எல் ஏக்களைப் பெற்றுவிட முடியும் என்று கணக்குப் போடுகிறது. அதன்வழியே சட்டமன்றத்தில் யார் ஆட்சி அமைப்பது என்ற முடிவை எடுக்குமளவுக்கு தாம் செல்ல முடியும் என்றும் திட்டமிடலாம்.

சிறுபான்மையினரின் கவனம்

குஷ்பு பிறப்பால் ஓர் இஸ்லாமியர். அதனால், சிறுபான்மை மக்களிடம் இந்தச் செய்தியைக் கொண்டுச்செல்வதும், அதை குஷ்புவின் வார்த்தைகளாகவே வெளிப்பட வைப்பதும் பாஜக மீதுள்ள சிறுப்பான்மை எதிர்ப்பு மனநிலையை உடைக்க முடியும் என எண்ணுகிறது. தேசிய அளவில் மீடியாவில் பேசுவதற்கு வலுவான ஒருவராக குஷ்பு இடம்பெறலாம். இதெல்லாம் நடக்காவிட்டாலும் பாஜகவிற்கு கூடுதலாக ஒருவர் இணைந்தாலும் லாபமே.

பாஜகவில் இணைந்த குஷ்பு! – லாபம் குஷ்புவுக்கா… பாஜகவுக்கா?

குஷ்புவால் பாஜகவுக்கு லாபமா?

பாஜகவின் இணைவதால் குஷ்புக்கு என்ன லாபம் இருக்க முடியும்? முதலில், லைம் லைட் உள்ள ஒரு கட்சியில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள நினைத்திருக்கலாம். ஏனெனில், காங்கிரஸ் கட்சியின் தலைமை யார் என்ற பிரச்சனைக்கே இன்னும் முழுமையான தீர்வு வரவில்லை. இந்த நிலையில் அடுத்த தேர்தலை எப்படி எதிர்கொள்ளும், அதில் எப்படி வெற்றிகொள்ளும்? ஒருவேளை அடுத்த தேர்தலிலும் மத்தியில் ஆட்சியை காங்கிரஸ் கட்சியால் பிடிக்க முடியாவிட்டால், 15 ஆண்டுகள் இப்படியே கழிக்க முடியுமா… என்ற யோசனை வந்திருக்கலாம்.

குஷ்பு பாஜகவில் சேர டெல்லியைத் தேர்தெடுத்ததிலிருந்தே அவரின் இலக்கு தேசிய பொறுப்புகளை நோக்கிதான் என்பது தெளிவாகிறது. அநேகமாக, காங்கிரஸ் கட்சியில் அளிக்கப்பட்டிருந்த தேசிய செய்தித் தொடர்பாளர் பதவியை எதிர்பார்க்கலாம்; கொடுக்கவும் படலாம். மேலும் சில மாதங்களில் ராஜ்யசபா சீட் அளிக்கப்படவும் வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை அதிமுகவிடம் பாஜக அழுத்தம் கொடுத்து, காலியாக இருக்கும் கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தலில் குஷ்பு போட்டியிட வாய்ப்பைப் பெறலாம்.

பாஜகவில் இணைந்த குஷ்பு! – லாபம் குஷ்புவுக்கா… பாஜகவுக்கா?

குஷ்புவின் மீது பல்வேறு வழக்குகள் போட்டிருப்பது பெரும்பாலும் பாஜக தோழமை சக்திகள்தான். அதனால், அந்த வழக்குகள் வாபஸ் பெற படலாம். அதனால் மன உளைச்சலிலிருந்தும் பயண அலைச்சலிலிருந்தும் குஷ்பு விடுபடலாம். நிச்சயம் பாஜகவை விட அதிக பயன் குஷ்புக்கு இருக்கவே வாய்ப்பிருக்கிறது.

பொதுவான நெருக்கடி

பாஜக – குஷ்பு இருவருக்கும் உள்ள நெருக்கடி என்பது ஒன்றுதான். குஷ்பு கொஞ்சம் முற்போக்கு எண்ணம் கொண்டவர். அதனால், சில விஷயங்கள் மீது அழுத்தமாக தம் கருத்தைச் சொல்லிவிடுவார். அப்படிச் சொல்லாமல் எப்படி இருப்பது என்று குஷ்பு, அவர் அப்படிச் சொல்லிவிட்டால் எப்படிச் சமாளிப்பது என்று பாஜகவும் பயிற்சி எடுக்க வேண்டும்.