காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பதவியிலிருந்து குஷ்பூ நீக்கம்!

 

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பதவியிலிருந்து  குஷ்பூ நீக்கம்!

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பொறுப்பிலிருந்து நடிகை குஷ்பூ நீக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பூ இன்று பாஜக தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணையவுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பதவியிலிருந்து  குஷ்பூ நீக்கம்!

கடந்த சில மாதங்களாகவே நடிகை குஷ்பூ – காங்கிரஸ் கட்சிக்குள் மோதல் ஏற்பட்டு வந்தது.புதிய கல்விக்கொள்கை குறித்து பாராட்டு தெரிவித்த குஷ்பூவை தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி விமர்சித்திருந்தார். அத்துடன் அக்கட்சியின் எம்பி வசந்தகுமார் மறைவையொட்டி சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது உருவப்படம் திறந்து வைக்கப்பட்டது. அந்த நிகழ்வில் நடிகை குஷ்பூ-வுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பதவியிலிருந்து  குஷ்பூ நீக்கம்!

இருப்பினும் கடந்த வாரம் ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை குறித்த காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.அதில் பாஜகவுக்கு எதிராக அவர் கடுமையான கருத்துக்களை முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.