கோலியா… ரோஹித் ஷர்மா? – மும்பையுடன் மோதும் பெங்களூரு #IPL #MIvsRCB

கோலியா… ரோஹித் ஷர்மா? – மும்பையுடன் மோதும் பெங்களூரு #IPL #MIvsRCB

ஐபிஎல் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நேற்றைய போட்டியில் அசத்தலான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு வெற்றியைப் பெற்றிருக்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

கோலியா… ரோஹித் ஷர்மா? – மும்பையுடன் மோதும் பெங்களூரு #IPL #MIvsRCB

இன்றையப் போட்டியில் மும்பை அணியோடு மோதுகிறது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ். இரு அணிகளுமே வலுவானவை என்பதால் இன்று நடைபெறும் போட்டியில் அனல் பறக்கும் என்று உறுதியாக நம்பலாம்.

ஐபிஎல் 2020 -தொடரின் முதல் போட்டியில் சென்னையோடு மோதியது மும்பை. சென்ற ஆண்டின் சாம்பியன் எனும் வகையிலும், சென்னையில் சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் இல்லாததாலும் மும்பையே வெல்லும் எனப் பலரும் கருதினர். ஆனால், ராயுடு மற்றும் டூ பிளஸியின் சிறப்பான ஆட்டத்தால் சென்னை வெற்றிப் பெற்றது.

கோலியா… ரோஹித் ஷர்மா? – மும்பையுடன் மோதும் பெங்களூரு #IPL #MIvsRCB

மும்பையின் இரண்டாம் போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் நடந்தது. இதில் ரோஹித் ஷர்மா 80, சூர்யகுமார் யாதவ் 47 ரன்கள் அடித்து கொல்கத்தாவைத் திணறடித்தனர். இதனால், 49 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வென்றது.

மும்பை பந்துவீச்சைப் பொறுத்தவரை பும்ரா, பொலார்ட், பட்டின்சன், போல்ட் ஆகியோர் நன்கு பந்து வீசியுள்ளனர்.

கோலியா… ரோஹித் ஷர்மா? – மும்பையுடன் மோதும் பெங்களூரு #IPL #MIvsRCB

பெங்களூரு அணிக்கும் இது மூன்றாம் போட்டியே. அது முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபத் அணியுடன் மோதி தேவ்தத் படிக்கல், டி வில்லியர்ஸ் ஆகியோரின் அதிரடியிலும் சாஹலின் மாயப் பந்துவீச்சிலும் பெங்களூரு வெற்றியை ருசித்தது.

இரண்டாம் போட்டியில் ல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் டீமோடு மோதியது. பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல் அட்டகாசமாக ஆடி 132 ரன்கள் எடுத்து ஸ்கோரை 206 ஆக உயர்த்தினார். இதனால், 97 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது பெங்களூரு.

கோலியா… ரோஹித் ஷர்மா? – மும்பையுடன் மோதும் பெங்களூரு #IPL #MIvsRCB

இன்று மோதும் மும்பை vs பெங்களூரு அணிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது?

பேட்டிங்கைப் பொறுத்தவரை பெங்களூரு டீமில் ஆரோ பின்ச், டி வில்லியர்ஸ், தேவ்தத் படிக்கல், விராட் கோலி, வாஷிங்டன் சுந்தர் என நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். இதற்கு இணையாக மும்பை அணி, டி காக், ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ், திவாரி, ஹிர்திக் பாண்டியா, பொலார்ட் என ஆர்டர் மிகச் சிறப்பாக வைத்திருக்கிறது.

கோலியா… ரோஹித் ஷர்மா? – மும்பையுடன் மோதும் பெங்களூரு #IPL #MIvsRCB

பவுலிங்கைப் பொறுத்தவரை பெங்களூரு அணியில், சாஹல், ஷிவம் டுபே, நவ்திப் சைனி, ஸ்டெயின், உமேஷ் யாதவ் என சீரான பட்டியல் இருக்கிறது. அதேபோல, மும்பை அணியில் பும்ரா, ட்ரெண்ட் போல்ட், ஜேம்ஸ் பட்டின்சன், சாஹர், க்ருனால் பாண்டியா, பொலார்ட் ஆகியோர் தாக்குதல் நடத்த காத்திருக்கிறார்கள்.

கோலியா… ரோஹித் ஷர்மா? – மும்பையுடன் மோதும் பெங்களூரு #IPL #MIvsRCB

இரு அணிகளுக்கும் இன்றைய போட்டி முக்கியமானது. ஏனெனில், இரண்டுமே இதற்கு முந்தைய போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளன. அதனால் தொடர் தோல்வியை விரும்ப மாட்டார்கள். ஆயினும் முதல் பேட்டிங் பெங்களூரு பிடிக்கும்பட்சத்தில் மும்பைக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்று தோன்றுகிறது. ஏனெனில், மும்பை பவுலர்கள் ஒரு குறிப்பிட்ட ஸ்கோரில் பெங்களூரு அணியைக் கட்டுப்படுத்துவார்கள் என்று கணிக்கப்படுகிறது. ஆயினும் ஒரே ஓவரில் வெற்றி யார் பக்கம் வேண்டுமென்றாலும் திரும்பி விடும் என்பதற்கு நேற்றைய ஆட்டமே சாட்சி.

கோலியா… ரோஹித் ஷர்மா? – மும்பையுடன் மோதும் பெங்களூரு #IPL #MIvsRCB

அணியின் கேப்டன்களில் இருவருமே நல்ல அனுபவம் வாய்ந்தவர்களே… யார் தமது அணியை வெற்றியை நோக்கி அழைத்துச்செல்லவிருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள இன்னும் சில மணிநேரம் காத்திருக்க வேண்டும்.