8 ஆண்டுகளாக கோலி கேப்டன் – வெல்ல முடியாத கோப்பை – சீறும் விமர்சனங்கள்!

 

8 ஆண்டுகளாக கோலி கேப்டன் – வெல்ல முடியாத கோப்பை – சீறும் விமர்சனங்கள்!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிதான் ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஐபிஎல் அணியின் கேப்டனும். ஐபிஎல் 6 வது சீசனிலிருந்து தொடர்ந்து கோலியே கேப்டனாக நீடித்தாலும் பெங்களூர் அணியால் ஒருமுறைக்கூட கோப்பையை வெல்ல முடியவில்லை. இதனால், கோலி மீது கடும் விமர்சனம் எழ ஆரம்பித்துவிட்டது.

2008 ஆம் ஆண்டில் தொடங்கிய ஐபிஎல் சீசனில், பெங்களூர் அணியின் முதல் கேப்டனாக இருந்தவர் ராகுல் டிராவிட். அந்த சீசனில் 14 போட்டிகளில் 4 -ல் மட்டுமே வென்று லீக் போட்டியோடு திரும்பியது. அடுத்த ஆண்டில் அனில் கும்ப்ளேவை கேப்டானாக்க, அவர் இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றும் கோப்பை கிட்ட வில்லை.

8 ஆண்டுகளாக கோலி கேப்டன் – வெல்ல முடியாத கோப்பை – சீறும் விமர்சனங்கள்!

மூன்றாவது சீசனிலும் கும்ப்ளேதான் கேப்டன், பிளே ஆஃப் வரை சென்றது. நான்காம், ஐந்தாம் சீசன்களுக்கு நியூசிலாந்து வெட்டோரி கேப்டன். ஒருமுறை ரன்னர் அப், ஒருமுறை லீக் என பெங்களூர் அணியைக் கொண்டுச்சென்றார்.

ஆறாம் சீசனில்தான் விராட் கோலி கேப்டனாகப் பெறுப்பேற்கிறார். அதிர்ஷ்டம் இல்லாத அணி என்ற பெயரை கோலி உடைத்தெறிவார் என்று பலரும் நினைத்தார்கள். ஆனால், 2016 ஆம் ஆண்டு ஒரே ஒரு முறை மட்டுமே ரன்னர் அப் -ஆக வந்தது. இம்முறை பிளே ஆஃப்க்கு வந்திருக்கிறது. அவ்வளவுதான். கோப்பையின் அருகேகூட செல்ல முடியவில்லை.

8 ஆண்டுகளாக கோலி கேப்டன் – வெல்ல முடியாத கோப்பை – சீறும் விமர்சனங்கள்!

ஆக்ரோஷமான வீரர்தான் கோலி. ஆனாலும், ஒருமுறைகூட கோப்பையை அணிக்காக பெற்றுக்கொடுக்க முடியவில்லை என்பது அவரின் கேப்டன்ஷிப் பற்றி கேள்விகளை எழுப்புகிறது.

இந்த ஆண்டில் பெங்களூர் டீம் தேர்வு ரொம்பவே சிறப்பாக இருந்தது. அறிமுக வீரராக இருந்தாலும் தேவ்தத் சீசன் முழுக்கவே நன்றாக ஆடினார். கோலி, ஆரோன் பின்ச், செம ஃபார்மில் இருக்கும் டி வில்லியர்ஸ், மொய்ன் அலி என பேட்டிங்கில் செம ஸ்ட்ராகாவும், சுழலில் மிரள வைக்கும் சஹல், ரன்களைக் கட்டுப்படுத்தும் வாஷிங்டன் சுந்தர், ஆக்ரோஷ சைனி, சமயோஜிதமாக வீசும் சிராஜ் என பவுலிங்கும் நன்றாக இருந்தது. ஆனாலும், இதை ஒருங்கிணைப்பில் கேப்டன் கோலி சிறப்பாகச் செயல்படவில்லையோ என்ற எண்ணம் வருவது இயல்பே.

8 ஆண்டுகளாக கோலி கேப்டன் – வெல்ல முடியாத கோப்பை – சீறும் விமர்சனங்கள்!

முதல் பேட்டிங் என்றதுமே மும்பை அணி 200 ரன்கள் எனும் இலக்கு வைத்துக்கொண்டதைப் போல, பெங்களூர் 150-170 ரன்கள் அடித்திருந்தால்கூட நேற்றைய போட்டியில் வென்றிருக்க முடியும். ஆனால், 131 ரன்கள் என்பது ரொம்பவே குறைவு. எதிரணிக்கு ரன்ரேட் 6 என்பதாக வைத்தால் பவுலர்களால் என்ன செய்ய முடியும்.

இந்த நிலையில் பெங்களூர் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து கோலி விலக வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கூறியிருக்கிறார். அநேகமாக இது பலராலும் வழிமொழியப்படும் என்றே தெரிகிறது.