”உணவு தானிய உற்பத்தி 14.45 கோடி டன்களாக இருக்கும்” – மத்திய வேளாண் அமைச்சர் தகவல்

”உணவு தானிய உற்பத்தி 14.45 கோடி டன்களாக இருக்கும்” – மத்திய வேளாண் அமைச்சர் தகவல்

2020-21ம் ஆண்டு காரீப் பருவத்தில் உணவு தானிய உற்பத்தி 14 கோடியே 45 லட்சத்து 20 ஆயிரம் டன்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

”உணவு தானிய உற்பத்தி 14.45 கோடி டன்களாக இருக்கும்” – மத்திய வேளாண் அமைச்சர் தகவல்

இந்திய தொழில்துறை கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த டிஜிட்டல் மாநாடு ஒன்றில் பங்கேற்று பேசிய அவர் இதனை தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் பேசுகையில், கடந்த 2019-20ம் ஆண்டு காரீப் பருவத்தில் உணவு தானிய உற்பத்தி 14 கோடியே 33 லட்சத்து 80 ஆயிரம் டன்களாக இருந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட பொது முடக்கத்தையும் கடந்து, உணவு தானியங்களின் விளைச்சல் அமோகமாக நடைபெற்றிருப்பது, அது குறித்த முன்கூட்டிய மதிப்பீடுகளின் மூலம் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

”உணவு தானிய உற்பத்தி 14.45 கோடி டன்களாக இருக்கும்” – மத்திய வேளாண் அமைச்சர் தகவல்

மேலும், உணவு தானியங்கள் பயிரிடப்பட்ட நிலத்தின் அளவும் 1121.75 லட்சம் ஹெக்டேர் என்றளவில் 4.51 சதவீத அதிகரிப்பை கண்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், பணப்பயிர்களாக கருதப்படும் கரும்பு மற்றும் பருத்தி ஆகியவற்றின் விளைச்சலும் மிக சிறப்பாகவே இந்த ஆண்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

”உணவு தானிய உற்பத்தி 14.45 கோடி டன்களாக இருக்கும்” – மத்திய வேளாண் அமைச்சர் தகவல்

மேலும், புதிய வேளாண் சீர்திருத்தங்கள் குறித்து விவசாயிகள் தவறாக வழிநடத்தப்படுவதாக குற்றம்சாட்டிய அவர், நாட்டில், குறைந்தபட்ச ஆதார விலை அடிப்படையிலான கொள்முதல் மற்றும் மண்டிகள் தொடர்ந்து செயல்படும் என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.

  • எஸ். முத்துக்குமார்