ஆக்சிஜன் வழங்கக்கோரி இஸ்ரோவிடம் கெஞ்சும் கேரளா

 

ஆக்சிஜன் வழங்கக்கோரி இஸ்ரோவிடம் கெஞ்சும் கேரளா

இஸ்ரோவிடம் திரவ ஆக்சிஜனை வழங்குமாறு கேரளா கடிதம் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளது.

ஆக்சிஜன் வழங்கக்கோரி இஸ்ரோவிடம் கெஞ்சும் கேரளா

இந்தியாவில் கொரோனா பாதிப்போரின் எண்ணிக்கை உயர்ந்து வரும் சூழலில் ஆக்சிஜன் சிலிண்டரின் தேவையும் அதிகரித்து உள்ளது. பல இடங்களில் கொரானா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு ஆக்சிஜன் கிடைக்காததால் மூச்சுத்திணறலால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவின் நிலையை கண்டு பல்வேறு உலக நாடுகளும் ஆக்சிஜன் மற்றும் மருத்துவ வசதியை வழங்க முன்வந்துள்ளன.

இந்நிலையில் மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் இருந்து வாரந்தோறும் 10 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் வழங்குமாறு கேரள அரசு தலைமைச் செயலர் விபி ஜாய் கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், கொரோனா நோயாளிகளுக்காக திரவ ஆக்சிஜனை வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் செயல்பட்டுவரும் இஸ்ரோ மையத்தில் தற்போது வாரந்தோறும் 14 ஆயிரம் கிலோ லிட்டர் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழ்நாடு அரசு மருத்துவ சேவை நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது.