காயலான் கடைக்கு போகும் பேருந்துகளை நடமாடும் கடைகளாக மாற்றிய கேரளா!

 

காயலான் கடைக்கு போகும் பேருந்துகளை நடமாடும் கடைகளாக மாற்றிய கேரளா!

பிரபலத்திற்காக பேருந்து வடிவில் ஓட்டல் அமைத்தது போக, பேருந்தே ஓட்டலாக மாறி பிரபலமாகி இருக்கிறது கேரளாவில். வருமானத்தை பெருக்க இப்படி ஒரு திட்டத்தை கொண்டு வந்திருக்கிறது கேரள போக்குவரத்துக்கழகம்.

இனிமேல் எதற்கும் உதவாது என்கிற ரீதியில் இருக்கும் பழுதடைந்த பழைய பேருந்துகளை காயலான் கடைக்கு போட்டு சொர்ப்ப வருமானம் பார்ப்பதை விட அதைவைத்து அதிகமாக என்ன சம்பாதிக்கலாம் என்று கணக்கு போட்ட கேரள போக்குவரத்து கழகம், பழைய பேருந்துகளை சிற்றுண்டி நிலையங்களாகவும், மினி சூப்பர் மார்க்கெட்டுகளாகவும் மாற்றி இருக்கிறது.

காயலான் கடைக்கு போகும் பேருந்துகளை நடமாடும் கடைகளாக மாற்றிய கேரளா!

கொரோனா ஊரடங்கினால் பேருந்துகள் ஓட்டம் நிறுத்தப்பட்டதால், கேரள போக்குவரத்து கழகம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்தது. ஊரடங்கின் தளர்வுகளில் பொதுபோக்குவரத்து தொடங்கியபோது மக்கள் கொரோனா அச்சத்தினால் அதிகம் வராமல் இருந்தபோதும் வருமான இன்றி தவித்தது போக்குவரத்து துறை. இதை எப்படி சமாளிப்பது என்று யோசித்தபோதுதான், பழைய பேருந்துகளை நடமாடும் கடைகளாக மாற்றினால் கொரோனா தொற்று அச்சத்தினால் வெளியே வரத்தயங்கும் மக்களுக்கு வீடு அருகிலேயே கொண்டு சப்ளை செய்யலாம். ஓடவும் முடியாத பேருந்துகளை ஒரு இடத்தில் நிற்க வைத்து சிற்றுண்டி நிலையங்களாகவும், மினி சூப்பர் மார்க்கெட்டுகளாக மாற்றலாம் என்று முடிவெடுத்து அதை நடைமுறைக்கு கொண்டுவந்துவிட்டனர்.

காயலான் கடைக்கு போகும் பேருந்துகளை நடமாடும் கடைகளாக மாற்றிய கேரளா!

சப்ளைகோ, குடும்ப ஸ்ரீ, ஹார்டிக்ராப், சிறைத்துறை ஆகிய இடங்களில் உற்பத்தியாகும் பொருட்களை எடுத்து வந்து விற்க ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.
இந்த திட்டத்தின் மூலமாக கேரள போக்குவரத்து கழகத்தின் கடன் சுமை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.