கேரள கன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஃபிராங்கோ முல்லக்கலுக்கு கொரோனா!

 

கேரள கன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஃபிராங்கோ முல்லக்கலுக்கு கொரோனா!

கேரளாவில் கன்னியாஸ்திரியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ள முன்னாள் ஆயர் ஃபிராங்கோ முல்லக்கல்லுக்கு கொரோனா உறுதியாகி உள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் பிஷப்பாக இருந்த ஃபிராங்கோ முல்லக்கல் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கன்னியாஸ்திரி புகார் கூறினார். இதைத் தொடர்ந்து பிஷப் பதவியிலிருந்து அவரை நீக்கியது கிறிஸ்தவ சபை. அதன்பிறகு கைது செய்யப்பட்ட முன்னாள் பிஷப் ஃபிராங்கோ நிபந்தனை ஜாமீன் பெற்று தற்போது ஜலந்தரில் உள்ளார்.

கேரள கன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஃபிராங்கோ முல்லக்கலுக்கு கொரோனா!பாலியல் வன்கொடுமை வழக்கு கேரள நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று முன்னாள் ஆயர் ஃபிராங்கோ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “குற்றம்சாட்டப்பட்ட ஃபிராங்கோவால் தற்போது நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது. அவரை சந்தித்த நபருக்கு கொரோனா பாசிடிவ் உறுதியாகி உள்ளதால், ஃபிராங்கோ தற்போது சுய தனிமைப்படுத்தலில் உள்ளார்” என்று கூறியிருந்தார். இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஃபிராங்கோவின் செய்தித் தொடர்பாளர் பாதிரியார் பிட்டர், ஃபிராங்கோவுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது” என்றார்.
கடந்த ஜூலை 1ம் தேதி ஃபிராங்கோ நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்க வேண்டும். ஜலந்தரில் கட்டுப்பாட்டுப் பகுதியில் அவர் உள்ளதால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

கேரள கன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஃபிராங்கோ முல்லக்கலுக்கு கொரோனா!நேற்று நடந்த வழக்கு விசாரணையின்போது ஃபிராங்கோ தங்கியுள்ள பகுதி கொரோனா பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படவில்லை என்று எதிர் தரப்பு வழக்கறிஞர் கூறினார். இதைத் தொடர்ந்து குற்றவாளி வழக்கைத் தாமதப்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருவதால் அவருக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்து செய்ய நேரிடும் என்று எச்சரித்த நீதிமன்றம் ஆகஸ்ட் 13ம் தேதி நடைபெறும் விசாரணையின்போது அவர் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த நிலையில் பிஷப் ஃபிராங்கோவுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.