புதிய நோயாளிகள் அதிகரிப்பதில் கேரளா முதலிடம் – இந்தியாவில் கொரோனா

புதிய நோயாளிகள் அதிகரிப்பதில் கேரளா முதலிடம் – இந்தியாவில் கொரோனா

கொரோனாவின் கோரப்பிடிக்குள் சிக்கித் தவிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. புதிய தொற்றுகள் சற்று குறைந்தாலும் தினசரி எண்ணிக்கையில் 50 ஆயிரத்துக்கும் கீழ் குறையவில்லை.

இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறையும் போக்கு தடையின்றி தொடர்கிறது. நாடு முழுவதும் தொற்று பாதித்தவர்களில் 10ல் ஒருவர் மட்டுமே தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதிய நோயாளிகள் அதிகரிப்பதில் கேரளா முதலிடம் – இந்தியாவில் கொரோனா

தற்போது நாட்டில் 7,15,812 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த பாதிப்பில் 9.29%. தினசரி தொற்று பாதிப்பும் கடந்த 3 நாட்களாக, 5%-க்கும் கீழ் உள்ளது. இன்று தினசரி பாதிப்பு 3.8% ஆக உள்ளது.

குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 69 லட்சத்தை (68,74,518)நெருங்கியுள்ளது. சிகிச்சை பெறுபவர்களுக்கும், குணமடைந்தவர்களுக்கும் உள்ள வித்தியாசம் தொடர்ந்து அதிகரித்து இன்று 61,58,706-ஆக உள்ளது. குணமடைந்தோர் வீதம் 89.20% ஆக அதிகரித்துள்ளது.

புதிய நோயாளிகள் அதிகரிப்பதில் கேரளா முதலிடம் – இந்தியாவில் கொரோனா

கடந்த 24 மணி நேரத்தில் 79,415 பேர் குணமடைந்துள்ளனர். 55,839 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 702 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா நோயாளிகள் குணமாகும் மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. 2 மற்றும் 3-ம் இடங்களில் கர்நாடகா, கேரளா உள்ளன. ஆந்திர பிரதேசம் நான்காம் இடத்திலும், தமிழ்நாடு ஐந்தாம் இடத்தில் உள்ளது.

புதிய நோயாளிகள் அதிகரிப்பதில் கேரளா முதலிடம் – இந்தியாவில் கொரோனா

புதிய கொரோனா நோயாளிகள் அதிகரிக்கும் மாநிலங்களின் பட்டியலில் இதுவரை மகாராஷ்டிரா முதல் இடத்தில் இருந்து வந்தது. இன்று காலை நேர நிலவரப்படி, கேரளா முதல் இடத்திற்குச் சென்றுவிட்டது. இரண்டாம் இடத்தில் மகாராஷ்டிராவும், மூன்றாம் இடத்தில் கர்நாடாகவும் உள்ளன. தமிழ்நாடு ஏழாம் இடத்திற்கு இறங்கி விட்டது.

புதிய நோயாளிகள் அதிகரிப்பதில் கேரளா முதலிடம் – இந்தியாவில் கொரோனா

தினசரி இறப்பு எண்ணிக்கையில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும், கர்நாடகா இரண்டாம் இடத்திலும். மேற்கு வங்கம் மூன்றாம் இடத்திலும் டெல்லி நான்காம் இடத்திலும் உள்ளன. தமிழ்நாடு ஏழாம் இடத்தில் உள்ளது.