கேரள முதல்வர் பினராயி விஜயனை கோவிடியோட் என்ற பா.ஜ.க. எம்.பி.. பதிலடி கொடுத்த கேரள அமைச்சர்

 

கேரள முதல்வர் பினராயி விஜயனை கோவிடியோட் என்ற பா.ஜ.க. எம்.பி.. பதிலடி கொடுத்த கேரள அமைச்சர்

கேரள முதல்வர் பினராயி விஜயனை கோவிடியோட் என்று பா.ஜ.க. எம்.பி. முரளிதரன் கூறியதற்கு அம்மாநில சுகாதார அமைச்சர் பதிலடி கொடுத்துள்ளார்.

கேரள முதல்வர் கொரோனா நெறிமுறைகளை மீறி விட்டார் என பா.ஜ.க. எம்.பி. முரளிதரன் என் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக முரளிதரன் கூறுகையில், கோவிடியோட் என்பதன் பொருள் (சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா வைரஸ் விதிமுறைகளை மீறுபவர்கள்) என்னவென்று உங்களுக்கு தெரியும். கோவிட் நெறிமுறையை தொடர்ந்து மீறும் முதல்வருக்கு வேறு எந்த வார்த்தையும் பயன்படுத்த முடியாது. கோழிகோடு மருத்துவ கல்லூரியின் மருத்துவர்களின் கூற்றுப்படி, கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடந்த 4ம் தேதியன்று பரிசோதனையில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது. ஆனால் கோவிட் நெறிமுறைகளை பின்பற்றாமல் கடந்த 6ம் தேதி அவர் வாக்களித்தார் என குற்றம் சாட்டினார்.

கேரள முதல்வர் பினராயி விஜயனை கோவிடியோட் என்ற பா.ஜ.க. எம்.பி.. பதிலடி கொடுத்த கேரள அமைச்சர்
முரளிதரன்

கேரள முதல்வர் பினராயி விஜயன் கோவிட் நெறிமுறைகளை மீறினார் என்ற பா.ஜ.க. எம்.பி. முரளிதரனின் குற்றச்சாட்டை கேரள சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா மறுத்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் சைலஜா கூறியதாவது: அவர் எந்த அடிப்படையில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார் என்பது எனக்கு தெரியவில்லை. எந்த கோவிட்-19 நெறிமுறையையும் கேரள முதல்வர் மீறவில்லை. பதவிகளை வகிக்கும் மக்கள் இது போன்ற கருத்துக்களை கூறக்கூடாது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி, அறிகுறியற்ற நோயாளிகள் 3 முதல் 4 நாட்களுக்கு பிறகு மருத்துவமனையிலிருந்து வெளியேறலாம் மற்றும் வீட்டிலேயே சிகிச்சை பெறலாம். ஆனால் கேரளாவில் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்த 10 டிஸ்சார்ஜ் கொள்கையை நாம் பின்பற்றுகிறோம்.

கேரள முதல்வர் பினராயி விஜயனை கோவிடியோட் என்ற பா.ஜ.க. எம்.பி.. பதிலடி கொடுத்த கேரள அமைச்சர்
கே.கே.சைலஷா

கேரள முதல்வர் கொரோனா அறிகுறியவற்றவராக இருந்தார் மற்றும் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அதற்கு முன்னர் அவர் வீட்டு தனிமைப்படுத்தலில் இருந்தார். சோதனையில் அவருக்கு கோவிட் நெகட்டிவாக இருந்தது. இப்போது வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளார். இவற்றில் கோவிட்-19 நெறிமுறை மீறல் எங்கு நடந்தது?. இவ்வாறு அவர் தெரிவித்தார்.