கன்னியாஸ்திரீ பாலியல் வழக்கு… முன்னாள் பிஷப் மீது குற்றச்சாட்டு பதிவு!

கன்னியாஸ்திரீ பாலியல் வழக்கு… முன்னாள் பிஷப் மீது குற்றச்சாட்டு பதிவு!

கன்னியாஸ்திரீ பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஜலந்தர் முன்னாள் பிஷப் பிராங்கோ முல்லக்கல் மீது கேரள நீதிமன்றம் குற்றச்சாட்டைப் பதிவு செய்தது.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் கிறிஸ்தவ பிஷப்பாக இருந்தவர் பிராங்கோ முல்லக்கல். இவர் கேரளாவில் பணியாற்றி காலத்தில் தன்னை கட்டாய பாலியல்

கன்னியாஸ்திரீ பாலியல் வழக்கு… முன்னாள் பிஷப் மீது குற்றச்சாட்டு பதிவு!

வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக கன்னியாஸ்தரி புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து பிஷப் பதவியில் இருந்து பிராங்கோ விடுவிக்கப்பட்டார். அவர் மீது கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் குருவிளங்காடு போலீஸ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தது. அதன் பிறகு நிபந்தனை ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார்.

கன்னியாஸ்திரீ பாலியல் வழக்கு… முன்னாள் பிஷப் மீது குற்றச்சாட்டு பதிவு!
இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று பிராங்கோ தரப்பில் விசாரணை நீதிமன்றம், கேரள உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்டது. இதனால் அவர் வழக்கில் இருந்து தப்ப முடியாது. விரைவாக வழக்கு விசாரணை நடந்து தீர்ப்பு வெளியாகும் என்று

கன்னியாஸ்திரீ பாலியல் வழக்கு… முன்னாள் பிஷப் மீது குற்றச்சாட்டு பதிவு!

எதிர்பார்க்கப்பட்டது. அதை உறுதி செய்யும் வகையில் அவர் மீது கோட்டயத்தில் உள்ள கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. குற்றச்சாட்டு பதிவு செய்யப்படுவதையொட்டி பிராங்கே நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அவர் மீதான குற்றச்சாட்டை நீதிபதி படித்து பதிவு செய்தார். இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை செப்டம்பர் 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.