Home இந்தியா கேரளாவில் அதிகபட்சமாக இன்று 488பேருக்கு கொரோனா உறுதி! மொத்த பாதிப்பு 7,438 ஆக உயர்வு

கேரளாவில் அதிகபட்சமாக இன்று 488பேருக்கு கொரோனா உறுதி! மொத்த பாதிப்பு 7,438 ஆக உயர்வு

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஜூலை 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 8,25,736ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 5,17,546 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22,171 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக கொரோனா தொற்று கண்டறியப்பட்ட மாநிலமான கேரளா, சிறப்பான தடுப்பு நடவடிக்கைகளால் பிற மாநிலங்களைவிட தொற்றிலிருந்து விரைவாக மீண்டு வந்தது. இந்நிலையில் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வருவோரால் கேரளாவில் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரளாவில் இன்று அதிகபட்சமாக மேலும் 488பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 167பேர் வெளிநாடுகளில் இருந்தும், 76 பேர் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள். 245பேருக்கு நோயாளிகளின் தொடர்புகள் மூலம் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இன்று இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் அம்மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 30 ஆக அதிகரித்து உள்ளது. இன்று 143 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்ததையடுத்து, இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,963ஆக உயர்ந்துள்ளது. இதுவரை அங்கு கொரோனாவால் மொத்தம் 6,950பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Popular

“குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” : பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

உ.பி.யில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடிக்கு திமுக உறுப்பினர் அட்டை – திமுக இணையதள காமெடி!

மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.முவில் “எல்லோரும் நம்முடன்.”. “வாருங்கள் திமுகவில் இணையலாம்” என்ற இணைய தள அமைப்பு, அரசியல் ரீதியாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. இணைய தளம் தொடங்கிய 3 நாட்களில்...

தங்க விலை மீண்டும் அதிகரிப்பு; ஒரு கிராம் தங்கம் ரூ.4,834க்கு விற்பனை!

தங்க விலை நேற்று ஏற்றத்தை சந்தித்தைத் தொடர்ந்து இன்று உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு இறுதி வரையிலுமே ரூ.30 ஆயிரத்துக்குள்ளாக இருந்து வந்த தங்க விலை, ஊரடங்கு...

ரயில்களின் உணவு பெட்டிகள் நீக்க முடிவு- பயணிகள் அதிருப்தி

நீண்ட தூர ரயில்களில் உணவு தயாரிக்கும் பெட்டிகளை தவிர்ப்பதற்கு இந்திய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ரயிலில் உணவு தயாரிக்கும் பெட்டியை இணைப்பதற்கு பதிலாக, பயணிகள்...
Do NOT follow this link or you will be banned from the site!