Home இந்தியா கேரளாவில் மேலும் 225 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 5,204 ஆக உயர்வு

கேரளாவில் மேலும் 225 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 5,204 ஆக உயர்வு

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஜூன் 30 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவிலும் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 6,75,453ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 4,09,083 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19,303 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக கொரோனா தொற்று கண்டறியப்பட்ட மாநிலமான கேரளா, சிறப்பான தடுப்பு நடவடிக்கைகளால் பிற மாநிலங்களைவிட தொற்றிலிருந்து விரைவாக மீண்டு வந்தது. இந்நிலையில் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வருவோரால் கேரளாவில் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரளாவில் இன்று மேலும் 225பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 117பேர் வெளிநாடுகளில் இருந்தும், 57பேர் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள். 51 பேருக்கு நோயாளிகளின் தொடர்புகள் மூலம் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. கேரளாவில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25ஆக அதிகரித்து உள்ளது. இன்று 126பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்ததையடுத்து, இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,174ஆக உயர்ந்துள்ளது. இதுவரை அங்கு கொரோனாவால் மொத்தம் 5,429 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

பைனான்சியர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்

மதுரை திண்டுக்கல் மாவட்டத்தில் பைனான்சியர் வெட்டிகொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தார். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சாலையில் ராதாராஜ் நகரை சேர்ந்தவர்...

நிவர் புயல் அப்டேட்: காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது

காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு...

சிறுமியை கடத்தி திருமணம் செய்த பட்டதாரி ஆசிரியர் போக்சோவில் கைது

தர்மபுரி தருமபுரியில் 12ஆம் வகுப்பு மாணவியை கடத்திச்சென்று திருமணம் செய்த பட்டதாரி ஆசிரியரை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைதுசெய்தனர். தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் பகுதியை...

மலைவாழ் மக்களுக்கு வீட்டுமனை பட்டா கோரி எம்எல்ஏ மனு

திருப்பத்தூர் மலைவாழ் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம், திமுக எம்எல்ஏ நல்லதம்பி மனு வழங்கினார். அந்த...
Do NOT follow this link or you will be banned from the site!