Home இந்தியா கேரளாவில் 123 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 3,726ஆக உயர்வு!!

கேரளாவில் 123 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 3,726ஆக உயர்வு!!

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஜூன் 30 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவிலும் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 4,74,587 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 2,72,636 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,915 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக கொரோனா தொற்று கண்டறியப்பட்ட மாநிலமான கேரளா, சிறப்பான தடுப்பு நடவடிக்கைகளால் பிற மாநிலங்களைவிட தொற்றிலிருந்து விரைவாக மீண்டு வந்தது. இந்நிலையில் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வருவோரால் கேரளாவில் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரளாவில் திங்கட்கிழமையான இன்று மேலும் 123பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 84பேர் வெளிநாடுகளில் இருந்தும், 33 பேர் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள். 6 பேருக்கு நோயாளிகளின் தொடர்புகள் மூலம் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உள்ளது.

இன்று 53 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்ததையடுத்து, இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,941 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் 3,726 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

தேவர் குருபூஜை : மதுரையில் போக்குவரத்து மாற்றம்!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113-வது ஜெயந்தி விழா மற்றும் 58வது குருபூஜை இன்று (30 ஆம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதனால் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்...

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் தனது பங்கை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்

40 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்த புல்வாமா தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் தனது பங்கினை பாகிஸ்தான் நேற்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது. 2019 பிப்ரவரி 14ம் தேதியன்று...

கேரளா மாதிரி பழங்கள், காய்கறிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவியுங்க…. பஞ்சாப் அரசை நெருக்கும் எஸ்.ஏ.டி…

கேரளாவை பின்பற்றி, நம் மாநிலத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவியுங்க என்று பஞ்சாப் அரசு எஸ்.ஏ.டி. கட்சி வலியுறுத்தியுள்ளது. கேரளாவில் முதல்வர்...

நாட்டின் பிரதமர் என்பதால் எதையும் மோடியால் பேச முடியும்… தேஜஸ்வி யாதவ் பதில்

பிரதமர் மோடி தன்னை காட்டாட்சி இளவரசர் என்று கூறியது குறித்து பதிலளிக்கையில், நாட்டின் பிரதமர் என்பதால் அவரால் எதுவும் பேச முடியும் என்று தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.
Do NOT follow this link or you will be banned from the site!