கேரளாவில் மேலும் 86பேருக்கு கொரோனா தொற்று உறுதி! மொத்த பாதிப்பு 1,416ஆக உயர்வு

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஜூன் 30 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவிலும் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 1,99,785ஆக உயர்ந்துள்ளது. இதுவரை92,027பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,612 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ பணியாளர்கள்

இந்தியாவிலேயே முதன்முறையாக கொரோனா தொற்று கண்டறியப்பட்ட மாநிலமான கேரளா, சிறப்பான தடுப்பு நடவடிக்கைகளால் பிற மாநிலங்களைவிட தொற்றிலிருந்து விரைவாக மீண்டு வந்தது. இந்நிலையில் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வருவோரால் கேரளாவில் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கேரளாவில் செய்வாய்கிழமையான இன்று முதன்முறையாக அதிகபட்சமாக மேலும் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 46 பேர் வெளிநாடுகளில் இருந்தும், தமிழகத்தில் இருந்து 7 பேர் உள்ளிட்ட
26 பேர் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள். பாலக்காட்டில் இரு சுகாதார பணியாளர் உள்ளிட்ட 13 பேருக்கு நோயாளிகளின் தொடர்புகள் மூலம் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. 19 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இன்று திருவனந்தபுரத்தில் 77 வயதுடைய நோய் பாதித்தவர் உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து கேரளாவில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனை சிகிச்சையில் உள்ளவர் எண்ணிக்கை 708 ல் இருந்து 744 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவால் 1,416 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 11 ஆக உயர்ந்துள்ளது. நோயிலிருந்து 627 பேர் குணமடைந்துள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Most Popular

அமெரிக்காவிலும் களைகட்டிய ராமர் கோயில் பூமிபூஜை கொண்டாட்டங்கள்!

அயோத்தி ராமர் கோயில் பூமிபூஜை விழாவை அமெரிக்காவிலும் சிறப்பாக கொண்டாடியுள்ளனர் அங்குள்ள இந்தியர்கள். அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா இன்று சிறப்பாக நடந்து முடிந்தது. இதில் மொத்தம் 200 மத தலைவர்களுக்கு...

அண்ணாவின் கொள்ளுப்பேத்தி குடிமைப் பணி தேர்வில் வெற்றி – உதயநிதி வாழ்த்து

2019 ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. அதில் தேர்ச்சியானவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் நேர்காணல் நடத்தப்பட்டது. அதன் பிறகு கொரோனா பாதிப்பால் தேர்வு முடிவுகள் வெளியாகாமல் இருந்தது....

புதுச்சேரியில் கொரோனா தொற்று உறுதியானவர்கள் குடும்பத்துடன் தலைமறைவு!

புதுச்சேரி மாநிலத்தில் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 286 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதேபோல் அதிகபட்சமாக ஒரே நாளில் 7பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 182 நபர்கள் புதுச்சேரியிலும், 21 பேர்...

மாப்பிள்ளை பிளஸ் டூ… மகள் இன்ஜினீயரிங்… காதல் திருமணத்தால் ஆத்திரம்!- அந்தஸ்தால் இளைஞரை கொன்று சாலையில் வீசிய பெண்ணின் தந்தை, தாய் மாமன்

பிளஸ் டூ படித்த காய் கறி வியாபாரியை இன்ஜினீயரிங் படித்து வரும் மகள் காதலித்து திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரம் அடைந்த பெண்ணின் தந்தை, மாப்பிள்ளையை கொலை செய்துவிட்டு சாலையில் வீசி சென்ற...