ராஜினாமா செய்தார் பினராயி விஜயன்!

 

ராஜினாமா செய்தார் பினராயி விஜயன்!

தமிழகம், அசாம், கேரளா, மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கேரளாவிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. கேரளாவைப் பொறுத்தவரை ஆளும் இடதுசாரி அணிக்கும் காங்கிரஸ் அணிக்கும் என இருமுனை போட்டியாகவே நிலவியது.

ராஜினாமா செய்தார் பினராயி விஜயன்!

99 இடங்களில் இடதுசாரியும் 41 இடங்களில் காங்கிரஸும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த முறை நியமம் தொகுதியில் மட்டும் வெற்றிபெற்றிருந்த பாஜக இம்முறை ஒரு தொகுதியில் கூட வெற்றி காணவில்லை. சபதம் போட்டு பாஜகவின் கணக்கை முதலமைச்சர் பினராயி விஜயன் முடித்துவைத்திருக்கிறார். பினராயி விஜயன் ஒரு வரலாற்று சாதனையையும் படைத்துள்ளார்.

ராஜினாமா செய்தார் பினராயி விஜயன்!

கேரளாவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸுக்கும், இடதுசாரிகளுக்குமே அதிகாரம் கைமாறிக் கொண்டிருந்தன. ஆளுங்கட்சி தொடர்ந்து ஆட்சி செய்த வரலாறே கிடையாது. அதனை மாற்றி எழுதியிருக்கிறார் பினராயி விஜயன். முதல் முறையாக ஆளுங்கட்சி ஆட்சியைத் தக்கவைத்திருக்கிறது. அவருக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்து சொல்லி வருகின்றனர்.

ராஜினாமா செய்தார் பினராயி விஜயன்!

இச்சூழலில் பினராயி விஜயன் தனது ராஜினாமா கடிதத்தை அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமதுவிடம் அளித்துள்ளார். இரண்டாவது முறையாக கேரளாவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக பினராயி விஜயன் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அதில் அமைச்சரவை குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.