அனைத்து கட்சிகளும் தங்களது அரசியலை ஒதுக்கி வைத்தால்… மாசுபாட்டை தோற்கடிக்க முடியும்… கெஜ்ரிவால்

 

அனைத்து கட்சிகளும் தங்களது அரசியலை ஒதுக்கி வைத்தால்… மாசுபாட்டை தோற்கடிக்க முடியும்… கெஜ்ரிவால்

அனைத்து கட்சிகளும் தங்களது அரசியலை ஒதுக்கி வைத்து, ஒன்றிணைந்து நேர்மையான நடவடிக்கைகளை எடுத்தால் குறுகிய காலத்தில் மாசுபாட்டை தோற்கடிக்க முடியும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் காற்று மாசு தொடர்பாக கூறியதாவது: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஸ்ரீ பிரகாஷ் ஜவடேகரின் அறிக்கையை நான் கேள்விப்பட்டேன். ஒரு மாநிலத்தால் காற்று மாசுபாடு ஏற்படாது. காற்று மாசு காரணமாக வடஇந்தியாவின் அண்டை மாநிலங்களையும் பாதிக்கிறது என்ற அவரது கருத்துக்கு நான் முற்றிலும் உடன்படுகிறேன்.

அனைத்து கட்சிகளும் தங்களது அரசியலை ஒதுக்கி வைத்தால்… மாசுபாட்டை தோற்கடிக்க முடியும்… கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

பயிர் கழிவுகள் எரிப்பது பெரும் பிரச்சினையாக இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன். அதேசமயம் இந்த பிரச்சினை குறுகிய காலத்தில் தீர்த்து விடலாம் என்ற அவரது கருத்துக்கு நான் உடன்பட மாட்டேன். அனைத்து மாநில அரசுகளுக்கும் அரசியல் விருப்பம் இருந்தால் குறுகிய காலத்துக்குள் பிரச்சினை தீர்க்க முடியும். பூசா பயிலகத்தின் பரிந்துரையின்படி, பயிர் கழிவுகள் ரசாயனம் தெளிக்கப்படுகிறது. அது பயிர் கழிவுகளை எருவாக மாற்றுகிறது. ஹரியானா மற்றும் பஞ்சாபில் பயிர் கழிவுகளை சி.பி.ஐ. நிலக்கரி மற்றும் கோக்காக மாற்றுகின்றன.

அனைத்து கட்சிகளும் தங்களது அரசியலை ஒதுக்கி வைத்தால்… மாசுபாட்டை தோற்கடிக்க முடியும்… கெஜ்ரிவால்
பிரகாஷ் ஜவடேகர்

பயிர் கழிவுகளை ஒரு பொறுப்பாக கருதக்கூடாது, ஆனால் அதை ஒரு வாய்ப்பாக மாற்ற வேண்டும். அனைத்து மாநில அரசுகளும் இந்த மாற்று நடவடிக்கைகளை மேற்கொண்டால், அது விவசாயிகளுக்கு பண ரீதியாக பயனளிக்கும் மற்றும் வேலைவாய்ப்பையும் உருவாக்கும். அனைத்து அரசாங்களும் கடுமையாக உழைத்து, நேர்மையான முயற்சிகளை மேற்கொண்டால், பயிர் கழிவுகளினால் ஏற்படும் மாசுவை ஒரு குறுகிய காலத்தில் கணிசமாக குறைக்கப்படலாம். மேலும் பல தீர்வுகளை கண்டுபிடிக்க மாதந்தோறும் ஒரு கூட்டத்தை பயிர் கழிவுகள் எரிப்பதால் பாதிக்கப்படும் மாநிலங்களுடன் மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.