கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடு!

கீழடியில் அகழாய்வு நடைபெறும் பகுதிக்கு அருகே மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கீழடி அகழாய்வில் தமிழ் நாகரிகத்தைச் சேர்ந்த பல தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அதில், வடிகால் அமைப்புகள், சுடுமண் குழாய்கள், தமிழ் எழுத்துகள் பொறித்த பானைகள், எழுத்தாணிகள், சுடுமண் வார்ப்பு, பானை ஓடுகள், விளையாட்டுப் பொருட்கள், காதணிகள், தங்கம், உலோகப் பொருட்கள் என 2,600 ஆண்டுகள் புதைந்து கிடந்த ஆயிரக் கணக்கான பொருட்கள் கண்டறியப்பட்டன. தொன்மையான இந்த பொருட்கள் மக்களை வியப்பில் ஆழ்த்தியது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மார்ச்23 ஆம் தேதியுடன் அகழாய்வு பணிகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், கடந்த 20 ஆம் தேதி முதல் மீண்டும் 6ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கியுள்ளன

தொன்மையான மனிதர்களின் இன மரபியலை அறியும் வகையில் கொந்தகை ஈமக்காட்டுப்பகுதியில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வரும் பகுதிக்கு அருகில் உள்ள விவசாய விளைநிலத்தில் மனித எலும்புக்கூடு தற்போது கண்டறியப்பட்டுள்ளது கதிரேசன் என்பவருக்கு சொந்தமான விளைநிலத்தில் விவசாய பணிகளுக்காக குழி தோண்டும்போது மனித எலும்புக்கூடு இருந்ததை கண்டு தொல்லியல் துறையினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. மனித எலும்புக் கூட்டினை தொல்லியல் துறையினர் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக மரபணுவில் துறை பேராசிரியர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்

Most Popular

“தாலி வேணாம் ,ஜாலி போதும்” -கட்டிக்க மறுத்த காதலி-வெட்டி வீதியில் வீசிய ரவுடி..

தாலி கட்டிக்க மறுத்த காதலியை, ரோட்டிலேயே காதலன் அறுத்து கொலை செய்த சம்பவம் சவுத் பெங்களூரு மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. சவுத் பெங்களூருவில் உள்ள கிரிநகரில் இருப்பவர் அபி கௌடா .இவர் மீது பல...

‘மக்கள் பிரதிநிதிகளுக்கே தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை’ மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

கொரோனா பரவல் அதிகமாகிக்கொண்டிருந்தாலும் கொலை, கொள்ளை போன்ற செய்திகளும் வந்தவண்ணமே உள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் பரமகுரு கொலை செய்யப்பட்டது விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. இக்கொலை குறித்து திமுக தலைவர்...

கந்த சஷ்டி விவகாரம்: ‘கறுப்பர் கூட்டம்’ சுரேந்திரன் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல்!

இந்துக்களின் கடவுளர்கள் மற்றும் புராணங்கள் தொடர்பாக பல்வேறு வீடியோக்களை கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் வெளியிட்டு வருகிறது. அதனால், அந்த யூடியூப் சேனலை தடை செய்யவேண்டும் என்றும், சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய...

“அடப்பாவிங்களா !படிக்க அனுப்பின பொண்ணை பொணமாக்கிட்டிங்களே “பள்ளியில் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பெற்றோர் கதறல்..

பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு 14 வயது மாணவி ,பள்ளியின் வகுப்பறையிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பள்ளி மாணவர்களிடையே பரபரப்பை உண்டு பண்ணியுள்ளது. உ.பி.யின் நொய்டாவில் உள்ள ஒரு...
Open

ttn

Close