கீழடியில் மேலும் ஒரு மனித எலும்புக்கூடு கண்டுபிடிப்பு!

 

கீழடியில் மேலும் ஒரு மனித எலும்புக்கூடு கண்டுபிடிப்பு!

கீழடியில் அகழாய்வு நடைபெறும் பகுதிக்கு அருகே மேலும் ஒரு மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கீழடி அகழாய்வில் தமிழ் நாகரிகத்தைச் சேர்ந்த பல தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அதில், வடிகால் அமைப்புகள், சுடுமண் குழாய்கள், தமிழ் எழுத்துகள் பொறித்த பானைகள், எழுத்தாணிகள், சுடுமண் வார்ப்பு, பானை ஓடுகள், விளையாட்டுப் பொருட்கள், காதணிகள், தங்கம், உலோகப் பொருட்கள் என 2,600 ஆண்டுகள் புதைந்து கிடந்த ஆயிரக் கணக்கான பொருட்கள் கண்டறியப்பட்டன. தொன்மையான இந்த பொருட்கள் மக்களை வியப்பில் ஆழ்த்தியது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மார்ச்23 ஆம் தேதியுடன் அகழாய்வு பணிகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், கடந்த 20 ஆம் தேதி முதல் மீண்டும் 6ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கியுள்ளன

கீழடியில் மேலும் ஒரு மனித எலும்புக்கூடு கண்டுபிடிப்பு!

தொன்மையான மனிதர்களின் இன மரபியலை அறியும் வகையில் கொந்தகை பகுதியில் மேலும் ஒரு எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. 75 cm நீளம் கொண்ட இந்த எலும்புக்கூடு குறித்து மரபியல் சோதனை நடத்த தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே 3 எலும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் நான்காவதாக எலும்பு கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.