விரைவில் கீழடியில் 7ம் கட்ட அகழ்வாராய்ச்சி

 

விரைவில் கீழடியில் 7ம் கட்ட அகழ்வாராய்ச்சி

கீழடியில் 7ம் கட்ட அகழ்வாராய்ச்சிக்கான ஒப்புதல் கோரப்பட்டுள்ளது

சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழாய்வில் தமிழ் நாகரிகத்தைச் சேர்ந்த பல தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அதில், வடிகால் அமைப்புகள், சுடுமண் குழாய்கள், தமிழ் எழுத்துகள் பொறித்த பானைகள், எழுத்தாணிகள், சுடுமண் வார்ப்பு, பானை ஓடுகள், விளையாட்டுப் பொருட்கள், காதணிகள், தங்கம், உலோகப் பொருட்கள் என 2,600 ஆண்டுகள் புதைந்து கிடந்த ஆயிரக் கணக்கான பொருட்கள் கண்டறியப்பட்டன. தொன்மையான இந்த பொருட்கள் மக்களை வியப்பில் ஆழ்த்தியது.  6ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த பிப்ரவரி 19ம் தேதி முதல் விரிவான முறையில் நடைபெற்று வருகிறது. இந்த மாத இறுதியுடன் 6ம் கட்ட அகழாய்வு பணிகள் நிறைவு பெற உள்ள நிலையில் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

விரைவில் கீழடியில் 7ம் கட்ட அகழ்வாராய்ச்சி

இந்நிலையில் கீழடியில் தொடர்ந்து 7ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொள்வதற்கான மத்திய அரசு ஒப்புதல் கோரப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு அனுமதி வழங்கிய பின்னர் 7ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் துவங்க உள்ளதாக தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் தெரிவித்துள்ளார்.