Home விளையாட்டு கிரிக்கெட் 45 பந்துகளில் 84 ரன்கள் விளாசி வெற்றிபெற வைத்த கேதார் ஜாதவ் - நீங்க நம்பாட்டியும் அதான் நிஜம்!

45 பந்துகளில் 84 ரன்கள் விளாசி வெற்றிபெற வைத்த கேதார் ஜாதவ் – நீங்க நம்பாட்டியும் அதான் நிஜம்!

கேதார் ஜாதவ் இந்தப் பெயரைச் சொன்னாலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் டென்ஷனாகி விடுவார்கள். அந்தளவுக்கு சென்ற சீசன் ஐபிஎல் போட்டிகளில் சொதப்பினார்.

அதுவும் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் அவர் ஆடிய விதம் எவ்வளவு பொறுமைசாலியையும் கோபப்பட வைத்துவிடும். ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் கேதார் ஜாதவ் எதிர்கொண்டது 12 பந்துகள். அவற்றில் 8 டாட் பால்கள். அதுவும், ஒரு பந்துக்கு இரண்டு ரன்கள் எனும் வேளையிலும் என்பதுதான் உட்சபட்ச வேதனை. சேஸிங்கில் இப்படி ஒருவர் பந்துகளை வீணடிப்பது அணியைத் தோல்விக்கே அழைத்துச் செல்லும். அப்படித்தான் சென்றது.

கடைசி ஓவரில் 6 பந்துகளில் 26 ரன்கள் தேவை எனும்போது இரண்டு டாட் பால்கள், ஒரு பந்தில் சிங்கிள் ரன் என கேதார் ஜாதவ் ஆடியதைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த மேட்ச் முடிந்ததும் ரசிகர்களின் மீம்ஸ்களால் வறுத்தெடுக்கப்பட்டார் கேதர் ஜாதவ். அடுத்த போட்டியில் அவரை அணியிலிருந்து நீக்கினார் தோனி.

இப்போது சைய்யது முஷ்டாக் அலி கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. அதில் மகாராஷ்டிராவின் அணியில் இடம்பிடித்திருக்கிறார் கேதார் ஜாதவ்.

மகாராஷ்டிரா அணி சட்டீஸ்கரை எதிர்த்து ஆடியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய சட்டீஸ்கர் அணி 20 ஓவர் முடிவில் 192 ரன்கள் குவித்தது.

கடினமான இலக்கை நோக்கி ஆடத் தொடங்கியது மகாராஷ்டிரா. ருத்ராஜ் கெய்க்வாட் ராகுல் திரிப்பாதியும் அதிர்ச்சியடையும் ஆட்டத்தை ஆடி 14, 15 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து களம் இறங்கிய கேதார் ஜாதவ், ஷகித் இருவரும் அதிரடியாக ஆடினர். அதிலும் கேதார் ஜாதவ் 45 பந்துகளில் 84 ரன்கள் விளாசினார். இதில் 5 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால், அதுதான் நிஜம்.

ஜாதவின் ஆட்டம்தான் மகாராஷ்டிரா அணிக்கு வெற்றியைச் சூடித் தந்தது. இவ்வளவு நல்லா விளையாடுற ஜாதவ் ஏன் ஐபிஎல் போட்டியில் சொதப்பினார் என்பதுதான் இப்போது எல்லோருக்கும் எழுகிற கேள்வி!

மாவட்ட செய்திகள்

Most Popular

விவசாயிகள், தொழிலாளர்கள் இந்திய குடியரசின் பலம்… விவசாயிகளின் போராட்டத்துக்கு காங்கிரஸ் ஆதரவு..

விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள்தான் இந்திய குடியரசின் பலம் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. வேளாண் சட்டங்களை எதிர்த்தும் அவற்றை ரத்து செய்யக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள...

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ்-இடதுசாரிகள் தீவிரம்… முதல் கட்டமாக 77 தொகுதிகளுக்கு உடன்பாடு..

மேற்கு வங்கத்தில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற 77 தொகுதிகளிலும் மீண்டும் போட்டியிட காங்கிரஸ்-இடதுசாரிகள் இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் 294 உறுப்பினர்களை...

கங்கனாவை சந்திக்க நேரம் இருக்கு.. விவசாயிகளை சந்திக்க அவருக்கு நேரமில்லை.. கவர்னரை தாக்கிய சரத் பவார்

கங்கனாவை சந்திக்க நேரம் இருக்கு, ஆனால் விவசாயிகளை சந்திக்க அவருக்கு நேரமில்லை என்று மகாராஷ்டிரா கவர்னர் பகத் சிங் கோஷ்யாரியை சரத் பவார் விமர்சனம் செய்தார்.

குவிந்தது வர்த்தக ஒப்பந்தம்… எல் அண்டு டி நிறுவனத்துக்கு ரூ.2,467 கோடி லாபம்…

2020 டிசம்பர் காலாண்டில் எல் அண்டு டி நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.2,467 கோடி ஈட்டியுள்ளது. அடிப்படை கட்டமைப்பு துறையில் மிகப்பெரிய நிறுவனமான...
Do NOT follow this link or you will be banned from the site!