கவச உடையில் கொரோனா நோயாளிகளை சந்தித்து, நலம் விசாரித்த கரூர் ஆட்சியர்… பதவியேற்ற முதல் நாளிலேயே அசத்தல்!

 

கவச உடையில் கொரோனா நோயாளிகளை சந்தித்து, நலம் விசாரித்த கரூர் ஆட்சியர்… பதவியேற்ற முதல் நாளிலேயே அசத்தல்!

கரூர்

கருர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்று கொண்ட முதல் நாளே, அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளை சந்தித்து, நலம் விசாரித்த ஆட்சியர் பிரபுசங்கரின் செயல் நெகழிச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கரூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பிரபு சங்கர் ஐஏஎஸ் நேற்று பொறுப்பேற்று கொண்டார். இதனை தொடர்ந்து, கருர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொணட ஆட்சியர், அங்கு, கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறை குறித்தும், அரசு மருத்துவமனையில் உள்ள படுக்கை வசதி, ஆக்சிஜன் படுக்கை உள்ளிட்டவை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

கவச உடையில் கொரோனா நோயாளிகளை சந்தித்து, நலம் விசாரித்த கரூர் ஆட்சியர்… பதவியேற்ற முதல் நாளிலேயே அசத்தல்!

தொடர்ந்து, பாதுகாப்பிற்காக கவச உடை அணிந்து கொண்டு கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு உள்ள வார்டுக்கு சென்ற ஆட்சியர் பிரபுசங்கர், அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்தித்து அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும், அவர்களுடைய குறைகளையும் கேட்டறிந்தார். தொடர்ந்து, மருத்துவமனையில் அமைக்கப்பட்டு உள்ள 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட திரவ ஆக்சிஜன் கொள்கலனை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

அடிப்படையிலேயே மருத்துரான ஆட்சியர் பிரபுசங்கர், பணியேற்ற முதல்நாளே கொரோனா வார்டுக்கு சென்று நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்தது கரூர் மாவட்ட மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.