கறுப்பர் கூட்டம் அலுவலகத்தை பூட்டி போலீஸ் சீல் வைத்தது!

 

கறுப்பர் கூட்டம் அலுவலகத்தை பூட்டி போலீஸ் சீல் வைத்தது!

கந்த சஷ்டி கவசம் பற்றி அவதூறான தகவல் பரப்பியது தொடர்பாக கறுப்பர் கூட்டம் அலுவலகத்துக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சீல் வைத்தனர்.
கந்த சஷ்டி கவசம் விளக்கம் என்று கடந்த ஜனவரி மாதம் வீடியோ ஒன்றை வெளியிட்டது கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல். தற்போது மாரிதாஸ் இ-மெயில் பிரச்னை பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில், கடந்த ஜனவரி மாதம் வெளியான கந்த சஷ்டி வீடியோவுக்கு தீவிர வலது சாரிகள் ஜூலை மாதம் கண்டனம் தெரிவித்து பதிவிட ஆரம்பித்தனர். ஆறு மாதம் கழித்து கறுப்பர் கூட்டம் யூடியூப் சானலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கொந்தளித்தனர். இது தொடர்பாக தமிழக பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், அமைப்புகள் சார்பில் தமிழகம் முழுவதும் போலீசில் புகார் செய்யப்பட்டது.

கறுப்பர் கூட்டம் அலுவலகத்தை பூட்டி போலீஸ் சீல் வைத்தது!
புகார் அடிப்படையில் சென்னை சைபர் கிரைம் மற்றும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து செந்தில் வாசன் என்ற நிர்வாகியை கைது செய்தனர். நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை தியாகராயநகரில் செயல்பட்டு வந்த கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் அலுவலகத்துக்கு போலீசார் சீல் வைத்துள்ளனர். சென்னை மத்திய குற்றப்பிரிவு மற்றும் சைபர் கிரைம் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

கறுப்பர் கூட்டம் அலுவலகத்தை பூட்டி போலீஸ் சீல் வைத்தது!

கந்த சஷ்டி கவசம் வீடியோவை கறுப்பர் கூட்டம் யூடியூப் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டது. இருப்பினும் அலுவலகத்தில் அதன் உண்மையான ஃபுட்டேஜ் இருக்கும் என்பதாலும், மேலும் பல வீடியோக்கள், யூடியூப் சானலின் பின்னணி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்யும் வகையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.