கார்ப்பரேட் முதலாளிகளை குளிர்விக்க விவசாயிகளை உயிர்பலி கொடுக்க துணிந்துவிட்டார் மோடி – கருணாஸ் எம்எல்ஏ

 

கார்ப்பரேட் முதலாளிகளை குளிர்விக்க விவசாயிகளை உயிர்பலி கொடுக்க துணிந்துவிட்டார் மோடி – கருணாஸ் எம்எல்ஏ

பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தெய்வீக பரப்புரைக்காக மதுரை வந்த நடிகரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் உசிலம்பட்டி தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கார்ப்பரேட் முதலாளிகளை குளிர்விக்க விவசாயிகளை உயிர்பலி கொடுக்க துணிந்துவிட்டார் மோடி – கருணாஸ் எம்எல்ஏ

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ் எம்.எல்.ஏ., “கார்ப்பரேட் முதலாளிகளை குளிர்விக்க விவசாயிகளை உயிர்பலி கொடுக்க பிரதமர் நரேந்திர மோடி துணிந்துவிட்டார். மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயர் சூட்டுவதில் துவங்கி 68 சமுதாய மக்கள் குறித்து விரைவில் கணக்கெடுப்பு நடத்தி டி.என்.டி. ஒன்றைச் சான்று வழங்க வலியுறுத்தி பரப்புரையை துவங்கி இன்று மதுரைக்கு வந்துள்ளேன். கூட்டணி குறித்து அதிமுகவினர் தங்களது கூட்டணி கட்சியினருடன் விரைவில் பேசுவார்கள். நான் அரசியலில் அடையாளமாக மாற மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் உறுதுணையாக இருந்தவர் சசிகலா, அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு தற்போது நலமாக இருப்பது எங்களுக்கு இரட்டிப்பான முத்தான மகிழ்ச்சி.

அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், சிறைக்கு செல்லும் முன்பே தற்போதுள்ள அரசை தீர்மானம் செய்தவர் சசிகலா, அவர் வெளியே வரும் போது அவர்களுக்குள் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சனையை அவர்கள் தான் பேசி தீர்க்க வேண்டும், எனது தனிப்பட்ட கருத்துக்களை சொல்வது அரசியல் நாகரிகமாக இருக்காது” என தெரிவித்தார்.