“மூணாறு நிலச்சரிவில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இ-பாஸ் கொடுங்கள்” முதல்வரிடம் கருணாஸ் கோரிக்கை!

“மூணாறு நிலச்சரிவில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இ-பாஸ் கொடுங்கள்” முதல்வரிடம் கருணாஸ் கோரிக்கை!

கேரள மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நேற்று முன்தினம் இடுக்கி மாவட்டத்தில் இருக்கும் மூணாறு பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு தங்கியிருந்த 80 பேரை காணவில்லை என்றும் அவர்கள் மண்ணில் புதையுண்டு இருக்கலாம் எனவும் நேற்று காலை தகவல்கள் வெளியானது. இதனைத்தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்புப்படை வரவழைக்கப்பட்டு, நிலச்சரிவில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணி தொடங்கியது.

“மூணாறு நிலச்சரிவில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இ-பாஸ் கொடுங்கள்” முதல்வரிடம் கருணாஸ் கோரிக்கை!

முதற்கட்டமாக 15 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், நிலச்சரிவில் இருந்து 14 சடலங்கள் மீட்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து கடந்த 2 நாட்களாக அங்கு மீட்பு பணி தொடர்ந்து வரும் நிலையில், இதுவரை 29 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அந்த நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் பெரும்பாலானவர்கள் தென்தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும் இடம்பெயர்ந்து அந்த தேயிலை தோட்டத்தில் பணி புரிந்து வந்ததாகவும் தகவல் வெளியாகியது. இந்த நிலையில், மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்த குடும்பத்தினரை காண தமிழர்களுக்கு தங்கு தடையின்றி இ-பாஸ் வழங்க வேண்டும் என எம்.பி கருணாஸ் தமிழக முதல்வர் பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

“மூணாறு நிலச்சரிவில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இ-பாஸ் கொடுங்கள்” முதல்வரிடம் கருணாஸ் கோரிக்கை!

அந்த கடிதத்தில் நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் இபாஸ் கிடைக்கவில்லை என புகார் தெரிவித்துள்ளதாகவும் அதனால் அவர்களுக்கு இபாஸ் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு போர்க்கால நடவடிக்கையில் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.