Home அரசியல் பா.ஜ.க.வில் சேருகிறார் கருணாஸ்?

பா.ஜ.க.வில் சேருகிறார் கருணாஸ்?

பிரபல நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தேசிய தொடர்பாளராகவும் இருந்த குஷ்பூ பா.ஜ.க.வில் இணைந்த சூடு தணிவதற்குள், பிரபல நகைச்சுவை நடிகரும், எம்.எல்.ஏவுமான கருணாஸ் பா.ஜ.க.வில் இணையப் போகிறார் என்ற பர,பரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

பா.ஜ.க.வில் சேருகிறார் கருணாஸ்?
பா.ஜ.க.வில் சேருகிறார் கருணாஸ்?


தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் உள்ள குருவிக்கரம்பை என்னும் சிறிய கிராமத்தில் பிறந்தவர் கருணாஸ். சென்னை நந்தனம் மற்றும் மாநிலக் கல்லூரியில் படித்து ‘பாப்’ பாடகர் மற்றும் நாட்டுப்புறப் பாடகராக வலம் வந்தார். 2001-ல் பிரபல இயக்குனர் ‘பாலா’வின் இயக்கத்தில் வெளிவந்த “நந்தா“படத்தில் இவர் நடித்த “லொடுக்கு பாண்டி” கதாபாத்திரம் மிகப் பெரிய பெயரைப் பெற்றுத் தந்தது. இதைத் தொடர்து ‘பிதாமகன்’, ‘வசூல்ராஜா எம்.பி,பி.எஸ்’ என ஏராளமான படங்களில் நடித்து முன்னணிக்கு வந்தார் . ‘திண்டுக்கல் சாரதி’ என்ற வெற்றிப் படத்தையும் தயாரித்தார். இந்தக் கால கட்டங்களில் சன் தொலைகாட்சிக்கு மிக நெருக்கமாக இருந்தார்.கலாநிதி மாறனுடனும் நல்ல நட்பு வைத்திருந்தார்.

பா.ஜ.க.வில் சேருகிறார் கருணாஸ்?


இந்த நிலையில் “முக்குலத்தோர் புலிப்படை” என்ற அமைப்பைத் தொடங்கி அதன் தலைவராக இருந்த கருணாஸ், சசிகலாவின் உதவியுடன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார். இதன் பின்னர் 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் கிடைத்து திருவாடனை தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்தத் தேர்தலில் 8,696 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.
பின்னர் அதிமுக இரண்டாக பிளவு பட்டபோது சசிகலா அணியில் இருந்தார்.

பா.ஜ.க.வில் சேருகிறார் கருணாஸ்?

அடுத்து டி.டி.வி.தினகரன் அணிக்கு ஆதரவளித்தார். எடப்பாடி பழனிசாமி அரசை கடுமையாக எதிர்த்தார். பிறகு சமாதானமாகி தனது ஆதரவு எப்போதும்… எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்குத்தான் எனத் தெரிவித்து முதல்வரை சந்தித்தார்..
இந்த நிலையில் மதுரையில் உள்ள விமான நிலயத்திற்கு பசும்பொன்

பா.ஜ.க.வில் சேருகிறார் கருணாஸ்?

முத்துராமலிங்கத் தேவர் பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளார். அப்படி பெயர் வைத்தால் தனது முக்குலத்தோர் புலிப்படையை பாஜகவோடு இணக்கத் தயாராக இருப்பதாக பாஜக மேலிடத்திற்கு தகவல் தெரிவித்திருக்கிறாராம். விரைவிலேயே டெல்லி மேலிடம் மூலம் “கருணாஸின் கோரிக்கை நிறைவேற்றப்படும்” என்ற அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. –இர. சுபாஸ் சந்திர போஸ்

பா.ஜ.க.வில் சேருகிறார் கருணாஸ்?

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

ஆப்கானிஸ்தானில் நிறைய முதலீடு செய்துள்ளோம்.. தலிபான்களுடன் இந்திய அரசு பேச வேண்டும்.. பரூக் அப்துல்லா

ஆப்கானிஸ்தானில் தற்போது ஆட்சி செய்யும் தலிபான்களுடன் இந்திய அரசு பேச வேண்டும் என்று பரூக் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார். ஆப்கானிஸ்தானை தீவிரவாத அமைப்பான தலிபான் கைப்பற்றியுள்ளது. தற்போது...

பஞ்சாப் அமைச்சரவை இன்று விரிவாக்கம்.. அமரீந்தர் சிங் ஆதரவாளர்கள் பதவியை இழக்க நேரிடும்

பஞ்சாபில் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது. 18 எம்.எல்.ஏ.க்கள் இன்று அமைச்சர்களாக பதவியேற்கின்றனர். முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் ஆதரவாளர்கள் அமைச்சர் பதவியை...

பணம் மற்றும் அதிகாரத்தின் ஆதரவாளரான பா.ஜ.க. ஆரம்பத்தில் இருந்தே சமூக நீதியை எதிர்க்கிறது… அகிலேஷ் யாதவ்

பணம் மற்றும் அதிகாரத்தின் ஆதரவாளரான பா.ஜ.க. ஆரம்பத்தில் இருந்தே சமூக நீதியை எதிர்க்கிறது என்று அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டினார். 2021ம் ஆண்டு மக்கள் தொகை...

மலை போல் குவிந்த நேரடி வரி வசூல்.. சந்தோஷத்தில் மத்திய அரசு மத்திய அரசு

இந்த நிதியாண்டில் கடந்த 22ம் தேதி நிலவரப்படி மத்திய அரசின் நிகர நேரடி வரி வசூல் ரூ.5.70 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மத்திய அரசுக்கு...
TopTamilNews