“ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்பவர்களை பார்த்தால் சிரிப்பு வருது” – கரு.பழனியப்பன்

 

“ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்பவர்களை பார்த்தால் சிரிப்பு வருது” – கரு.பழனியப்பன்

தமிழ்நாட்டு மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பியிருக்கிறார்கள் என்பதைத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியிருக்கின்றன. பல வருடங்களாக ஆட்சிக் கட்டிலில் அமர போராடிக் கொண்டிருந்த திமுக தலைவர் ஸ்டாலினை ஒரு வழியாக அமர்த்தியிருக்கிறார்கள். ஜெயலலிதாவுக்குப் பின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சர் அரியணையில் அமர்கிறார் ஸ்டாலின்.

“ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்பவர்களை பார்த்தால் சிரிப்பு வருது” – கரு.பழனியப்பன்

இன்று எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தி சட்டப்பேரவை தலைவராக தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். நாளை ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார். மே 7ஆம் தேதி ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்கிறார். அவருக்கு உலக நாடுகளிலிருந்தும் வாழ்த்து வருகிறது. இமயம் முதல் குமரி வரை அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தேர்தல் சமயங்களில் திமுகவிற்கு ஆதரவாகப் பேசிய இயக்குநர் கரு.பழனியப்பன் வாழ்த்து சொல்லவே இல்லை. நீங்கள் ஏன் வாழ்த்து தெரிவிக்கவில்லை என அவரிடம் சிலர் கேட்டிருக்கிறார்கள். அதற்குப் பதிலளிக்கும் விதமாக ட்வீட் செய்திருக்கிறார். அந்த ட்வீட்டில், “தலைவருக்கும் (ஸ்டாலின்), செயலாளருக்கும் (உதயநிதி), அண்ணனுக்கும் (திருமா) வாழ்த்துச் சொல்லவில்லையா என்று கேட்டனர். மே 2 பிற்பகுதியில் இருந்து வாழ்த்துச் சொல்வோரை உற்றுப் பார்த்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னேன்” என்று நக்கலாகக் குறிப்பிட்டிருக்கிறார். இதன் பொருள் ஸ்டாலினை கிண்டல் செய்தவர்கள், அவர் ஆட்சிக்கு வரக் கூடாது என்று நினைத்தவர்கள் கூட வாழ்த்து சொல்கிறார்கள் என்பதே.