“ரசிகர்களை நம்பாமல் ரஜினி பாஜகவை நம்புகிறார்” – எம்.பி கார்த்தி சிதம்பரம்

“ரசிகர்களை நம்பாமல் ரஜினி பாஜகவை நம்புகிறார்” – எம்.பி கார்த்தி சிதம்பரம்

ரஜினிகாந்தின் செயல்பாடுகள் அனைத்திலும் பாஜக இருக்கிறது என எம்.பி கார்த்தி சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளாக கட்சி தொடங்கவிருப்பதாக கூறிவந்த நடிகர் ரஜினிகாந்த், கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் ஜனவரி மாதம் கட்சி தொடங்கப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். உடல்நிலை காரணத்தால் அரசியலில் ஈடுபட மாட்டார் என பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், திடீரென கட்சி தொடங்கப்போவதாக ரஜினி அறிவித்தது ஏன்? இதன் பின்னணியில் பாஜகவின் அழுத்தம் இருக்கிறதா? என பல கேள்விகள் எழுந்த வண்ணம் இருக்கிறது.

“ரசிகர்களை நம்பாமல் ரஜினி பாஜகவை நம்புகிறார்” – எம்.பி கார்த்தி சிதம்பரம்

அதோடு, ஜனவரியில் கட்சி தொடங்கிய பிறகு யாருடன் கூட்டணி அமைப்பார்? தனித்து தேர்தலில் தனித்து போட்டியிடுவாரா? என்ற கேள்விகள் பேசுபொருளாகியிருக்கிறது. இந்த அனைத்து கேள்விகளுக்கும் வரும் 31ம் தேதி அவர் வெளியிடவிருக்கும் கட்சி தொடர்பான அறிவிப்பு பதில் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“ரசிகர்களை நம்பாமல் ரஜினி பாஜகவை நம்புகிறார்” – எம்.பி கார்த்தி சிதம்பரம்

இந்த நிலையில், ரஜினி ரசிகர்களை நம்பாமல் பாஜகவை நம்புகிறார் என எம்.பி கார்த்தி சிதம்பரம் காரைக்காலில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். ரஜினியின் செயல்பாடுகள் அனைத்திலும் பாஜக இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், சிகலா சிறையில் இருந்து வெளியே வந்து விட்டால் அதிமுக தலைமை அவரிடம் சென்று விடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.