Home இந்தியா ‌2025க்குள் 10 லட்சம் ஐடி வேலைவாய்ப்புகள்... அரசின் அசத்தல் திட்டம்!

‌2025க்குள் 10 லட்சம் ஐடி வேலைவாய்ப்புகள்… அரசின் அசத்தல் திட்டம்!

நாட்டில் ஐடி துறையின் தலைமையிடமாக கர்நாடகா மாநிலம் இருக்கிறது. நாடு முழுவதும் ஐடி துறையில் படித்த பட்டாதாரிகளின் புகலிடமாக விளங்குகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வரப்பிரசாதமாகத் திகழ்கிறது. அம்மாநிலத்தில் 25% பொருளாதாரம் ஐடி துறையைச் சார்ந்தே இருக்கிறது.

இதன் காரணமாக மாநில ஜிடிபியில் டிஜிட்டல் பொருளாதார பங்களிப்பை 30% உயர்த்த மாநில அரசு முடிவுசெய்தது. ஜிடிபியை உயர்த்த ஐடி துறைகளில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதற்காக கர்நாடகா டிஜிட்டல் எகானமி மிஷன் (KDEM) என்ற திட்டத்தை அறிமுகம் செய்துவைத்துள்ளது. இந்தத் திட்டமானது PPP (Public Private Partnership) என்ற முறையில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 51% அரசும் 49% தனியார் நிறுவனங்களும் தங்களது பங்களிப்பை செலுத்துவார்கள். இத்திட்டத்தின் ஆரம்பப்புள்ளியாக KDEM தலைமை அலுவவகம் பெங்களூருவில் திறக்கப்பட்டது.

அலுவலகத்தைத் திறந்துவைத்துப் பேசிய துணை முதல்வர் அஸ்வந்த் நாராயணன், “2025ஆம் ஆண்டுக்குள் ஐடி துறையில் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கவே இந்தப் பிரத்யேக திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதற்கேற்றவாறு தனியார் முதலீடுகளை ஈர்க்கும் பணியும் தீவிரப்படுத்தப்படும். ஐடி மற்றும் அதனைச் சார்ந்துள்ள துறைகளில் ஏற்றுமதி வர்த்தகத்தை 150 பில்லியன் டாலருக்கு உயர்த்தவும், மொத்த வர்த்தகத்தை 300 பில்லியன் டாலருக்கு அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதனோடு மாநிலத்திலுள்ள அனைத்துப் கிராமப் பகுதிகளுக்கும் தொலைத்தொடர்பு வசதிகளை மேம்படுத்தவும், தடையில்லா மின்சாரம் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோல கிராமங்களுக்கும்-நகரங்களுக்கும் இருக்கும் இடைவெளியை நிரப்ப உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவதிலும் அரசு கவனம் செலுத்தும்” என்றார்.

விழாவில் பங்கேற்ற ஐடி துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ரமணா ரெட்டி பேசுசையில், “மாநில பொருளாதாரத்தில் 28% ஐடி துறையிலிருந்து கிடைக்கிறது. அதில் 98% பெங்களூருவில் மட்டுமே கிடைக்கிறது. பெங்களூருவைத் தவிர்த்து பல்வேறு நகரங்களுக்கு விரிவுப்படுத்தவும் 30% ஆக ஐடி பொருளாதாரத்தை உயர்த்தவுமே KDEM திட்டத்தின் பிரதான நோக்கம். அடுத்த ஐந்தாண்டுகளில் 5 டிரில்லியன் டாலருக்கு இந்திய பொருளாதாரம் முன்னேற்றமடைய வேண்டும் என்று மத்திய அரசு கூறியிருக்கிறது. அதில் இத்திட்டம் 10% அளவிற்காவது பங்களிப்பு செலுத்த வேண்டும்” என்றார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

கங்கனா ரணாவத்துக்கு பிடிவாரண்ட்

பாலிவுட் நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கங்கன ரணாவத், இந்தி பாடலாரிசியர் ஜாவித் அக்பர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

பீட்ரூட்டை பயன்படுத்தி சருமம் மற்றும் முடியின் பாதுகாப்பை அதிகரிப்பது எப்படி?

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பீட்ரூட் மிகவும் ஆரோக்கியமானது மட்டுமல்ல, சருமம் மற்றும் முடியின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தக் கூடியது. பீட்ரூட்டை பயன்படுத்தி சருமம் மற்றும் முடியை எப்படி இயற்கையான ஆரோக்கியமான முறையில் பராமரிப்பது...

விளக்கெண்ணெய் குளியல் : அப்படி அதுல என்ன ஸ்பெஷல்?

பொதுவாக குளியலுக்கு பயன்படுத்தப்படுவது நல்லெண்ணெய். உடல் சூட்டை தணிக்க நல்லெண்ணெயை நன்றாக தேய்த்துக் கொண்டு, ஊற வைத்து விட்டு குளிர்ப்பார்கள். ஆனால்? இது என்ன விளக்கெண்ணெய் குளியல்? கசப்புத் தன்மையுடன்...

ஸ்டாலினை புகழ்ந்து தள்ளும் கமல்

அரசியல் காரணங்களால் கருணாநிதியின் உடலுக்கு ஸ்ரீபிரியா மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் வந்து அஞ்சலி செலுத்தியதோடு சரி, இறுதிச்சடங்கில் கூட கமல்ஹாசன் பங்கேற்கவில்லை. ’’கட்சிக்கு அப்பாற்பட்ட உறவு எங்களுடையது. நாட்டுக்கு ஒரு...
TopTamilNews