சூதாட்டமாக மாறும் ஆன்லைன் கேம்கள்… சிறியவர்கள் முதல் பெரியவர்கள் பணத்தை இழக்கும் பரிதாபம்… விரைவில் தடை

சூதாட்டமாக மாறும் ஆன்லைன் கேம்கள்… சிறியவர்கள் முதல் பெரியவர்கள் பணத்தை இழக்கும் பரிதாபம்… விரைவில் தடை

ஆன்லைனை் விளையாட்டுகள் ஒரு வகையான சூதாட்டமாக மாறி வருவதால் கர்நாடகாவில் அவற்றுக்கு விரைவில் தடை விதிக்க உள்ளதாக அம்மாநில உள்துறை அமைச்சர் பசவராஜா பொம்மை தெரிவித்தார்.

சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மட்டுமே விளையாடி வந்த ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தற்போது வயதானவர்களும் அடிமையாகி வருகின்றனர். ஆன்லைன் கேம்களில் பல பணம் செலுத்தினால் மட்டுமே விளையாட முடியும். அதனால் இளைஞர்கள் பெற்றோர்களை தொந்தரவு செய்து வாங்கி அல்லது தெரியாமல் பணத்தை எடுத்து கேம்கள் விளையாட பயன்படுத்துகின்றனர்.இந்த ஆன்லைன் கேம்களால் இளைஞர்களுக்கு எந்தவித பயனும் கிடையாது, நேரம்தான் வெட்டியாக கழியும்.

சூதாட்டமாக மாறும் ஆன்லைன் கேம்கள்… சிறியவர்கள் முதல் பெரியவர்கள் பணத்தை இழக்கும் பரிதாபம்… விரைவில் தடை
பசவராஜா பொம்மை

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனை ஏற்றுக்கொண்டு சில மாநில அரசுகள் ஆன்லைன் கேம்களுக்கு தடை விதிக்க தொடங்கி விட்டன. தற்போது கர்நாடகா அரசும் ஆன்லைன் கேம்களுக்கு தடை விதிக்க யோசித்து வருகிறது. கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜா பொம்மை இது தொடர்பாக கூறியதாவது:ஆன்லைன் விளையாட்டுக்கள் தொடர்பாக பெற்றோர்கள் மற்றும் மற்றவர்களிடமிருந்து பல புகார்கள் வந்துள்ளன. ஒரு வகையான சூதாட்டமாக மாறி வரும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிப்பது தொடர்பாக மாநில அரசு தீவிரமாக யோசனை செய்து வருகிறது.

சூதாட்டமாக மாறும் ஆன்லைன் கேம்கள்… சிறியவர்கள் முதல் பெரியவர்கள் பணத்தை இழக்கும் பரிதாபம்… விரைவில் தடை
ஆன்லைன் கேம்

மாணவர்கள், குழந்தைகள், பையன்கள், பெண்கள் அதிகளவில் ஈடுபடுகின்றனர், மூத்த குடிமக்கள் கூட ஆன்லைன் கேம் விளையாட அதிகளவில் பணத்தை செலவிடுகின்றனர். ஆன்லைன் கேம்கள் வாயிலாக பல குடும்பங்கள் தங்களது வருவாயை இழக்கின்றன. அதனால்தான் ஆன்லைன் கேம்களை தடை செய்வது தொடர்பாக மாநில அரசு தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது. ஏற்கனவே ஆன்லைன் கேம்களுக்கு தடை செய்துள்ள மாநிலங்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் மற்றும் இது சம்பந்தமான துறைகளிடம் ஆலோசனை செய்த பிறகு தடை விதிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.