கர்நாடகாவில் டச்லெஸ் ஹேண்ட் சானிடிசர் மிஷினை உருவாக்கிய பொறியியல் மாணவர்கள்

கர்நாடகாவில் டச்லெஸ் ஹேண்ட் சானிடிசர் மிஷினை உருவாக்கிய பொறியியல் மாணவர்கள்

கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் வேளையில், கர்நாடகாவை சேர்ந்த 3 பொறியியல் மாணவர்கள் சென்சார் அடிப்படையில் இயங்கும் டச்லெஸ் (தொட தேவையில்லை) ஹேண்ட் சானிடைசர் மிஷினை கண்டுபிடித்துள்ளனர். மேலும் இந்த மிஷின்களை சிவமோகா மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் நடைபெறும் மையங்களில் இலவசமாக அமைத்து கொடுத்துள்ளனர்.

கர்நாடகாவில் டச்லெஸ் ஹேண்ட் சானிடிசர் மிஷினை உருவாக்கிய பொறியியல் மாணவர்கள்

இந்த டச்லெட் ஹேண்ட் சானிடைசர் மிஷினில் விவசாய வேலைகளுக்கு பயன்படுத்தும் பேட்டரியில் இயங்கும் தெளிப்பான் இயந்திரம் உள்ளது. மேலும் சென்சார் சாதனங்கள் மற்றும் புட்பேட்களை பயன்படுத்தி இந்த கருவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த எந்திரத்தை உருவாக்கிய 3 மாணவர்களில் ஒருவரான கவுசிக் ஆர் உடுபா இது தொடர்பாக கூறுகையில், இது ஒரு தானியங்கி மூடுபனி அடிப்படையிலான கை சுத்திகரிப்பு விநியோகம் செய்யும் எந்திரம்.

கர்நாடகாவில் டச்லெஸ் ஹேண்ட் சானிடிசர் மிஷினை உருவாக்கிய பொறியியல் மாணவர்கள்

இது ஒரு மாணவருக்கு 0.5 மில்லி சானிடைசர் விநியோகிக்கும். 500 மில்லி சானிடைசரை இதில் பயன்படுத்தினால் ஆயிரம் மாணவர்கள் கைகளை சுத்தம் செய்ய முடியும். இந்த கருவியை உருவாக்க ரூ.8 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் செலவானது. ஆனால் நாங்கள் இதனை தேர்வு மையங்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளோம். மேலும் இந்த கருவியில் உள்ள சிஸ்டத்தை மாற்றினால் வகுப்பறை மற்றும் தரையை சுத்தப்படுத்தவும் பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவித்தார்.