ரஜினி வெளியே வராமல் இருப்பது ஏன்? கராத்தே தியாகராஜன் பதில்

 

ரஜினி வெளியே வராமல் இருப்பது ஏன்? கராத்தே தியாகராஜன் பதில்

மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து ரஜினி பொதுமக்களுக்கு நல்ல ஒரு முடிவை அறிவிப்பார் என கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2017ம் ஆண்டில் இருந்து ரஜினி அரசியலில் களமிறங்கவிருக்கிறார் என்பது பேசு பொருளாக மாறியிருக்கிறது. ஆனால் இப்போது வரை ரஜினி, கட்சி தொடங்குவது குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனால் அவர் அரசியலுக்கு வருவாரா? என்பதே புரியாத புதிராக இருக்கிறது. இதனிடையே நடிகர் ரஜினிகாந்த் தனது உடல்நிலை மற்றும் தனக்கு மருத்துவர்கள் அறிவுரைகளாலேயே தான் வீட்டில் இருப்பதாகவும், தகுந்த நேரத்தில் என் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டை பற்றி மக்களுக்கு தெரிவிப்பேன் என்றும் விளக்கமளித்தார்.

ரஜினி வெளியே வராமல் இருப்பது ஏன்? கராத்தே தியாகராஜன் பதில்

இந்நிலையில் சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கராத்தே தியாகராஜன், “ரஜினி வெளியிட்ட அறிக்கை என்று சமூக வலைதள பக்கத்தில் பரவிய அறிக்கைக்கு ரஜினி முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். அவரது உடல்நிலை குறித்து தெளிவாக சொல்லிவிட்டார். விரைவில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி பொது மக்களுக்கு தனது அரசியல் நிலைப்பாடு குறித்த முடிவை அறிவிப்பார். கொரோனா வைரஸ் பரவலால் தமிழகம் மட்டுமல்லாமல் தேசிய தலைவர்களும் வெளியே வராமல் இருந்தனர். அப்படியே ரஜினிகாந்தும் வெளியே வராமல் இருந்து வருகிறார். விரைவில் அவரது நிலைப்பாடு என்ன என்பதை தெளிவாக கூறுவார்” என தெரிவித்தார்…