இந்திரனே இறங்கி வந்து சிவனை வழிபட்டு பிரதிஷ்டை செய்த காரணீஸ்வரம் திருக்கோவில் வரலாறு !

இந்திரனே இறங்கி வந்து சிவனை வழிபட்டு பிரதிஷ்டை செய்த காரணீஸ்வரம் திருக்கோவில் வரலாறு !

சென்னை – சைதாப்பேட்டையின் புராண காலப் பெயர் காரணிஸ்வரம். அப்பகுதிக்கு இப்பெயர் ஏற்பட காரணம் அங்கு சிவன் கோயில் தான். சென்னை சுற்றுவட்டார மக்கள் மட்டுமல்ல இந்திரனே சிவனை வழிபட இறங்கி வந்து இடம் என்ற பெருமைக்குரியது சைதாப்பேட்டை எனும் காரணீஸ்வரம். இங்குள்ள லிங்கம் இந்திரனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அது எப்படி நிகழ்ந்தது என்பதை அறிய பின்நோக்கி புராண காலத்திற்கு செல்ல வேண்டும்.

இந்திரனே இறங்கி வந்து சிவனை வழிபட்டு பிரதிஷ்டை செய்த காரணீஸ்வரம் திருக்கோவில் வரலாறு !

ஒருமுறை காமதேனுவை வசிஷ்டரிடம் கொடுத்து இருந்தான் இந்திரன். அப்படி இருந்த காலத்தில், தனது பூஜைக்கு இடையூறு செய்ததால் காமதேனுவை காட்டுப்பசுவாய் போகும்படி சாபமிட்டார் வசிஷ்டர்.

இந்த தகவலைக் கேள்விப்பட்ட இந்திரன் தனது காமதேனுவை எப்படி ஏனும் மீட்க வேண்டுமே என்ற நோக்கத்தில் ஒரு முனிவரிடம் யோசனை கேட்டான். அவர் ஆலோசனைப்படி பூலோகம் வந்த இந்திரன், வருணனை அழைத்து கபாலீஸ்வரர் உறையும் மயிலைக்கும் மருந்தீஸ்வரர் உறையும் திருவான்மியூருக்கும் இடையே மழை பொழியச் செய்தான். அப்பகுதி கார் அணி வகுத்து பொழிந்ததால் காரணீஸ்வரம் ஆயிற்று.

இந்திரனே இறங்கி வந்து சிவனை வழிபட்டு பிரதிஷ்டை செய்த காரணீஸ்வரம் திருக்கோவில் வரலாறு !

மழை பொழிந்து மண் செழித்தது. அங்கு ஓர் அழகிய சோலை அமைத்த இந்திரன். தனது வழிபாட்டுக்காக ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தான். அருகில் ஒரு குளமும் வெட்டினான். நித்தமும் நியமப்படி பூஜைகள் செய்து மனமுருக வழிபாடுகள் நடத்தி வந்தான்.

இதனிடையே காட்டுப்பசுவாய் திரிந்த காமதேனு பூர்வ புண்ணிம் காரணமாக சுயம்புவான மருந்தீஸ்வரர் லிங்கத்தைக் கண்டு தினசரி பாலை பொழிந்து அவரின் அன்புக்கு பாத்திரமாகி வந்தது.

இந்திரனே இறங்கி வந்து சிவனை வழிபட்டு பிரதிஷ்டை செய்த காரணீஸ்வரம் திருக்கோவில் வரலாறு !

நாட்கள் கடந்தன. ஈசன் இந்திரனின் பூஜையில் மகிழ்ந்து இரங்கி வந்தான். பூலோகம் இறங்கி வந்தான். காலத்தால் காட்டுப்பசுவான காமதேனுவும் சுய உணர்வு பெற்று வந்தது.

இறங்கி வந்த ஈசன் , இந்திரனிடம் கேட்டார். “கேள் இந்திரா என்ன வேண்டும் உனக்கு” என்றார்.

“காமதேனுவை மீட்டு தர வேண்டும் அய்யனே ” என்றான் இந்திரன். ஈசன் அழைத்தார் காமதேனு வந்தது. இந்திரனிடம் கொடுத்தார்.

இந்திரனே இறங்கி வந்து சிவனை வழிபட்டு பிரதிஷ்டை செய்த காரணீஸ்வரம் திருக்கோவில் வரலாறு !

இந்திரன் – ” இன்னொரு வேண்டுகோள்” என்றான். ஈசன்  “என்ன” என்றார். அய்யனே தங்கள் இங்கேயே வீற்றிருந்து வேண்டுவோர்க்கு வேண்டுவதை ஈந்தருள வேண்டும்” என்றான்.

“அப்படியே “என்றார் ஈசன். அதன்படி அம்பிகை சொர்ணாம்பிகையுடன் இன்றும்
நமக்கு அருளும் பொருட்டு வீற்றிருக்கிறார் காரணீஸ்வர் சைதாப்பேட்டையில்.

ஏழடுக்கு ராஜகோபுரத்துடன் எழுந்து நிற்கிறது திருக்கோயில். அருகே உள்ளது இந்திரன் வெட்டிய தீர்த்த குளம் கோபதிசரஸ் குளமும் நீராழி மண்டபத்துடன் உள்ளது.

கோயிலின் உள்ளே கம்பீரமாக வீற்றிருக்கிறார் இந்திரனின் காரணீஸ்வரர் . எண்ணங்களை ஒடுங்கச் செய்யும் எழிலான தோற்றம். மூலவரைச் சுற்றி சிறு பிரகாரம் அதில் அணி வகுத்து நிற்கின்றனர் 63 நாயன்மார்கள் . மறுபுறம் புராதனமான சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், பிட்சாடனர், நடராஜர் முதலான செப்புத் திருமேனிகள் கோயிலின் பழமையை பறைசாற்றுகிறன.

இந்திரனே இறங்கி வந்து சிவனை வழிபட்டு பிரதிஷ்டை செய்த காரணீஸ்வரம் திருக்கோவில் வரலாறு !

அருகிலேயே அம்மன் சன்னிதி உள்ளது. அருள் வெள்ளம் பொங்க நிற்கிறார் . சொர்ணாம்பிகை என்ற திருநாமம் கொண்ட அம்பிகை . மனதை ஒருமுகப்படுத்த ஏதுவாக அம்மன் சன்னதி வளாகம் முழுவதும் அபிராமி அந்தாதி உள்ளிட்ட பாமாலைகள் பல கல்வெட்டாய் பதிக்கப்பட்டுள்ளன.

வெளிப் பிரகாரத்தில் விநாயகர், முருகர், நவகிரகங்க சன்னிதிகளுடன் சனீஸ்வரனுக்கும் வீரபத்ரருக்கும் தனித்தனி சன்னிதிகள் உள்ளன.

இந்திரனே இறங்கி வந்து சிவனை வழிபட்டு பிரதிஷ்டை செய்த காரணீஸ்வரம் திருக்கோவில் வரலாறு !

நகர மயமாக்கலில் இந்திரன் அமைத்த நந்தவனம் சுருங்கி சிறுதோட்டமாக கோயில் வளாகத்தில் உள்ளது. யுகங்களை கடந்து ஈசன் வீற்றிருக்கிறார் நமக்காக. நியமமாக திருப்பணிகள் முடிந்து எழிலுடன் காட்சி அளிக்கிறது ஆலயம்.

சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகிலேயே அமைந்துள்ளது காரணிஸ்வரர் கோயில். பேருந்து நிலையமும் நடந்து செல்லும் தூரம் தான். காரணீஸ்வரனை வழிபட காரணம் வேண்டுமா என்ன ? சட்டென்று ஒரு முறை போய் வாருங்கள். ஓம் நமசிவாய.

-மு.ரா.சுந்தரமூர்த்தி