காரைக்கால் – தமிழகம் இடையே பேருந்து சேவை மீண்டும் தொடக்கம்

 

காரைக்கால் – தமிழகம் இடையே பேருந்து சேவை மீண்டும் தொடக்கம்

காரைக்கால்

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து 8 மாதங்களுக்கு பிறகு இன்று தமிழகத்திற்கு பேருந்து சேவை தொடங்கியது. கொரோனா நோய்த்தொற்று காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் கடந்த மார்ச் 22ஆம் தேதியில் இருந்து, அனைத்து பேருந்து சேவைகளும் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் மத்திய அரசு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்தபோதும், காரைக்கால் பகுதியில் புதுவை அரசு

காரைக்கால் – தமிழகம் இடையே பேருந்து சேவை மீண்டும் தொடக்கம்

போக்குவரத்து கழக பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டது. அங்கிருந்து தமிழக பகுதிகளுக்கு பேருந்து சேவை இயக்கப்படாத நிலையில், அவ்வழியாக செல்லும் தமிழக பேருந்துகளும் பேருந்து நிலையத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால், தமிழகத்திற்கு பேருந்து சேவையை விரைந்து தொடங்க வேண்டுமென காரைக்கால் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து

காரைக்கால் – தமிழகம் இடையே பேருந்து சேவை மீண்டும் தொடக்கம்

வந்தனர். இந்நிலையில், 8 மாதங்களுக்கு பிறகு காரைக்காலில் இருந்து அண்டை மாநிலமான தமிழகத்திற்கு இன்று முதல் அரசு பேருந்துகள் சேவை தொடங்கியது. இதேபோன்று தமிழகத்தில் இருந்து செல்லும் அரசுப் பேருந்துகளும் இன்று முதல் புதுவைக்குள் அனுமதிக்கப்பட்டது. மேலும், சென்னை, திருச்சி, கோவை, மதுரை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கான முன்பதிவு சேவைகளும், இருமாநில அரசு போக்குவரத்துக் கழகங்களிலும் தொடங்கப்பட்டது. இதனால் காரைக்கால் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்