உத்தர பிரதேசத்தில் அவரை மட்டும் குறிவைப்பது துரதிர்ஷ்டவசமானது…. காங்கிரஸ் தலைவருக்கு கபில் சிபல் ஆதரவு

உத்தர பிரதேசத்தில் அவரை மட்டும் குறிவைப்பது துரதிர்ஷ்டவசமானது…. காங்கிரஸ் தலைவருக்கு கபில் சிபல் ஆதரவு

சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய விவகாரத்தில் உத்தர பிரதேசத்தில் அவரை மட்டும் குறிவைப்பது துரதிர்ஷ்டவசமானது என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

சோனியா காந்தி அண்மையில் வழக்கமான பரிசோதனைக்கான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அப்போது ஜிதின் பிரசாதா, கபில் சிபல், குலாம் நபி ஆசாத் உள்பட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், கட்சிக்கு முழு நேர தலைவர் கோரியும், கட்சியில் சீர்திருத்தங்கள் கோரியும் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பினர். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

உத்தர பிரதேசத்தில் அவரை மட்டும் குறிவைப்பது துரதிர்ஷ்டவசமானது…. காங்கிரஸ் தலைவருக்கு கபில் சிபல் ஆதரவு
சோனியா, ராகுல் காந்தி

இந்த சூழ்நிலையில் இந்த வார தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் சோனியா காந்திக்கு காங்கிரஸ் தலைவர்கள் கடிதம் எழுதியதை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி கோபமாக பேசியதாக தகவல். இந்நிலையில் காந்தி குடும்பத்துக்கு எதிராக செயல்பட்டதால் காங்கிரஸ் தலைவர் ஜிதின் பிரசாதாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி உத்தர பிரதேச காங்கிரசார் தீர்மானம் நிறைவேற்றினர். இந்நிலையில் ஜிதின் பிரசாதாவுக்கு ஆதரவாக கபில் சிபல் கருத்து தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில் அவரை மட்டும் குறிவைப்பது துரதிர்ஷ்டவசமானது…. காங்கிரஸ் தலைவருக்கு கபில் சிபல் ஆதரவு
ஜிதின் பிரசாதா

கபில் சிபல் தனது டிவிட்டர் பக்கத்தில், துரதிர்ஷ்டவசமானது, உத்தர பிரதேசத்தில் ஜிதின் பிரசாதா அதிகாரப்பூர்வமாக குறிவைக்கப்படுகிறார். காங்கிரஸ் தனது சொந்தத்தை குறிவைத்து ஆற்றலை வீணாக்குவதற்கு பதிலாக சர்ஜிக்கல் ஸ்டிரைக்குடன் பா.ஜ.க.வை குறிவைக்க வேண்டும் என பதிவு செய்து இருந்தார்.