பிரதமர் மோடி எல்லாவற்றையும் சொல்கிறார்… ஆனால் ஒரு போதும் கேட்கவில்லை…. கபில் சிபல் தாக்கு

பிரதமர் மோடி எல்லாவற்றையும் சொல்கிறார்… ஆனால் ஒரு போதும் கேட்கவில்லை…. கபில் சிபல் தாக்கு

பிரதமர் மோடி எல்லாவற்றையும் சொல்கிறார் ஆனால் ஒரு போதும் கேட்கவில்லை என்று காங்கிரஸ் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.

வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியின் பல எல்லை பகுதிகளில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 18வது நாளை எட்டி விட்டது. வேளாண் சட்டத்தை திரும்ப பெற்றால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று விவசாயிகளும், சட்டங்களை ரத்து செய்ய முடியாது, திருத்தங்கள் வேண்டுமானால் செய்ய தயார் என்று மத்திய அரசும் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கின்றன.

பிரதமர் மோடி எல்லாவற்றையும் சொல்கிறார்… ஆனால் ஒரு போதும் கேட்கவில்லை…. கபில் சிபல் தாக்கு
பிரதமர் மோடி

இந்த சூழ்நிலையில் விவசாயிகளின் குறைகளை பிரதமர் மோடி ஒரு போதும் கேட்கவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் குற்றம் சாட்டியுள்ளார். கபில் சிபல் இது தொடர்பாக டிவிட்டரில், 2014ம் ஆண்டு முதல் மோடி ஜி, நீங்கள் எல்லாவற்றையும் சொல்கிறீர்கள், ஒரு போதும் கேட்கவில்லை என்று பதிவு செய்து இருந்தார்.

பிரதமர் மோடி எல்லாவற்றையும் சொல்கிறார்… ஆனால் ஒரு போதும் கேட்கவில்லை…. கபில் சிபல் தாக்கு
பா.ஜ.க.

முன்னதாக கபில் சிபல், வேளாண் சட்டங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் முன்வைத்த பரிந்துரைகளை மத்திய அரசு கருத்தில் கொள்ளவில்லை. அந்த சட்டங்கள் தொடர்பாக விரிவான உரையாடலை நடத்தி இருக்க வேண்டும். பெரும்பாலான சட்டங்கள் நாடாளுமன்ற குழுக்களுக்கு ஆய்வுக்காக பரிந்துரைக்கப்படவில்லை. மக்களவையில் அரசாங்கத்துக்கு பெரும்பான்மை உள்ளதால் அவர்கள் (பா.ஜ.க. அரசு) உண்மையில் கவலைப்படவில்லை என்று தெரிவித்து இருந்தார்.