அரசு பேருந்துக்கு வழிவிடாமல் சென்ற இளைஞருகு வீடு தேடி வந்த அபராதம்!

 

அரசு பேருந்துக்கு வழிவிடாமல் சென்ற இளைஞருகு வீடு தேடி வந்த அபராதம்!

கேரளாவில் அரசு பேருந்துக்கு வழிவிடாமல் சாலையை ஆக்கிரமித்து சென்ற இளைஞருக்கு அம்மாநில அரசு அபராதம் விதித்துள்ளது.

கேரளாவின் கண்ணூர் பகுதியில் பய்யனூரை சேர்ந்தவர் பிரவீன். இவர் பெரும்பா என்ற பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். இவருக்கு பின்னால் ஒரு அரசு பேருந்து வந்துள்ளது. அரசு பேருந்து ஓட்டுனர் வழிவிட கோரி பலமுறை ஹாரன் அடித்துள்ளார். ஆனால் அதை பொருட்படுத்தாத பிரவீன் தொடர்ந்து நடு ரோட்டிலேயே சாலையை அடைத்தப்படி பேருந்துக்கு வழிவிடாமல் சென்றுள்ளார். இப்படியே சுமார் 4 கிமீ தூரம் வரை அரசு பேருந்தின் ஓட்டுநருக்கு வழிவிடாது தெனாவட்டாக சென்றுள்ளார் பிரவீன். அதுமட்டுமல்லாமல் இரு கைகளையும் எடுத்துவிட்டு வண்டி ஓட்டுவது, கால்களை நீட்டுவது என்று சேட்டைகள் செய்தபடியே சென்றுள்ளார்.

அரசு பேருந்துக்கு வழிவிடாமல் சென்ற இளைஞருகு வீடு தேடி வந்த அபராதம்!

இளைஞரின் இந்த செயலை கண்ட பேருந்து வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். அந்த வீடியோ வைரலானதையடுத்து அம்மாநில போக்குவரத்து துறை பிரவீன் வீட்டுக்கு ரூ.10,500 அபராதம் செலுத்த கூறி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.