முதல்வர் மட்டும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் திமுக தலைவர்கள் மட்டும் எங்கும் செல்லக்கூடாதா? – கனிமொழி

முதல்வர் மட்டும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் திமுக தலைவர்கள் மட்டும் எங்கும் செல்லக்கூடாதா? – கனிமொழி

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக தேர்தல் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, கலைஞர் பிறந்த ஊரான திருக்குவளையில் உள்ள கலைஞர் இல்லத்தில் விடியலை நோக்கி பிரச்சாரத்தை திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கினார்.

முதல்வர் மட்டும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் திமுக தலைவர்கள் மட்டும் எங்கும் செல்லக்கூடாதா? – கனிமொழி

ஆரம்பித்த சில மணி நேரங்களிலேயே அனுமதியின்றி திருக்குவளையில் கூட்டம் நடத்தியதாக உதயநிதி ஸ்டாலினை போலீசார் கைது செய்து மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. அப்பகுதியில், 10 டி.எஸ்.பி, 14 ஆய்வாளர்கள் உட்பட 500 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதையடுத்து கரூர், புதுக்கோட்டை, வேதாரண்யம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது.

முதல்வர் மட்டும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் திமுக தலைவர்கள் மட்டும் எங்கும் செல்லக்கூடாதா? – கனிமொழி

இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், “கைது பண்ணினாலும் பிரச்சார பயணத்தை தொடருவோம். 2021 தேர்தலில் திராவிட கழகம் மிகப்பெரிய வெற்றியை பெரும் என்பது உறுதி” என தெரிவித்தார்.

இந்நிலையில் திமுக மகளிரணி செயலாளரான கனிமொழி, “முதலமைச்சர் எடப்பாடி எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், ஆனால் திமுக தலைவர்களோ எங்கும் செல்லக்கூடாது. அடிமை அதிமுக அரசுக்கு திமுகவின் பிரச்சாரத்தின் முதல் நாளே பயம் தொற்றி விட்டது. கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி அவர்களின் கைதை வன்மையாக கண்டிக்கிறேன். அவர் உடனடியாக விடுதலை. செய்யப்பட வேண்டும். அவருடைய பிரச்சார பயணம் தொடங்குவதற்கு அனுமதிக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.